நித்தியின் சக்தி வேணுமா?-கைலாஸா லிமிடெட் கணக்குக்கு பணம் அனுப்பலாமாம் -கடலுக்கு நடுவே  கணக்கு பண்றாராம்…  

 

நித்தியின் சக்தி வேணுமா?-கைலாஸா லிமிடெட் கணக்குக்கு பணம் அனுப்பலாமாம் -கடலுக்கு நடுவே  கணக்கு பண்றாராம்…  

கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட  நித்யானந்தா தனது வங்கி கணக்கை  வனுவாட்டிலிருந்து இயக்குகிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.  வனுவாட்டு  வரி ஏய்ப்போருக்கு ஒரு புகலிடம்- தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு நாடு. அது பிஜி, சாலமன் தீவுகள் மற்றும் நியூ கினியாவுக்கு அருகிலுள்ள  அண்டை நாடாகும்.

கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட  நித்யானந்தா தனது வங்கி கணக்கை  வனுவாட்டிலிருந்து இயக்குகிறார் என்று தகவல் கிடைத்துள்ளது. வனுவாட்டு  வரி ஏய்ப்போருக்கு ஒரு புகலிடம்- தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு நாடு அது. பிஜி, சாலமன் தீவுகள் மற்றும் நியூ கினியாவுக்கு அருகிலுள்ள  அண்டை நாடாகும்.

nithi

பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்படும்  நித்யானந்தா, தற்போது இந்திய அதிகாரிகளிடமிருந்து தப்பி ஓடி ஒளிந்து வருகிறார், பசிபிக் தீவு நாடான வனுவாட்டில் உள்ள ஒரு வங்கிக் கணக்கிலிருந்து தனது தொழிலை நடத்தி வருகிறாராம் . ஒரு பூஜைக்கு பணம் செலுத்துவது தொடர்பான விவரங்களைத் தேடிய ஒருவருக்கு நித்யானந்தாவின் நம்பிக்கைக்குரியவர் அனுப்பிய மின்னஞ்சலில் ,வனுவாட்டு குடியரசில்  உள்ள  ஒரு வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யச் சொல்கிறது அந்த மெயில் .

island

கார்ப்பரேட் அல்லது தனிநபர் வரி இல்லாத வரி புகலிடமாக அந்த தீவு உலகளவில் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது வங்கி ரகசியச் சட்டங்களையும் கொண்டுள்ளது, இது வாடிக்கையாளர்களின்  கணக்குகளை படு ரகசியமாக வைத்திருக்கிறது , இது வரிஏய்ப்போரின்  புகலிடமாக மிகவும் நமபிக்கையுள்ளதாக  அமைந்துள்ளது . சுருக்கமாகச் சொல்வதானால் இது ஒரு மினியேச்சர் சுவிஸ் வங்கி!

nithi

அந்த நாட்டின் மிகப்பெரிய வங்கியான வனுவாட்டு தேசிய வங்கியின் போர்ட் விலா கிளையில் ‘கைலாசா லிமிடெட்’ என்ற பெயரில் அக்கௌன்டை நித்திக்கு கொடுத்துள்ளது . போர்ட் விலா வனுவாட்டின் தலைநகரமாகும் ,அது குமுல் நெடுஞ்சாலையில் உள்ள வனுவாட்டு தேசிய வங்கியிலிருந்து சுமார் இரண்டு நிமிடங்கள் தொலைவில் உள்ளது  .பக்தர்கள் பணம் அனுப்ப விரும்பினால்  ‘கைலாசா லிமிடெட்’ என்ற பெயருக்கு அனுப்பவேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது .