நித்தியானந்தா ஆசிரமத்தில் உயிரிழந்த தமிழ்பெண்! அடுத்தடுத்து வெளியாகும் பகீர் உண்மைகள்… 

நித்தியானந்தா ஆசிரமத்தில் உயிரிழந்த தமிழ்பெண்! அடுத்தடுத்து வெளியாகும் பகீர் உண்மைகள்… 

நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்ததாக அப்பெண்ணின் தாயார் பகீர் தகவலை தெரிவித்துள்ளார். 

நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்ததாக அப்பெண்ணின் தாயார் பகீர் தகவலை தெரிவித்துள்ளார். 

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அர்ஜுணன் – ஜான்சிராணி தம்பதியின் 3-வது மகள் சங்கீதா. இவரது சகோதரி விஜி மஞ்சள் காமாலையால் கடந்த 2010 ஆம் ஆண்டு உயிரிழந்தார். சகோதரியை பிரிந்ததால் மன உளைச்சல் அடைந்த சங்கீதாவை அவரது பெற்றோர்கள் பெங்களூருவிலுள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் கொண்டு சேர்த்தனர். அதன்பின் சங்கீதாவுக்கு  உடல்நலமும், மனநலமும் சீரானது. அங்கேயே பணியாற்றிவந்த சங்கீதா கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

nithyananda

சங்கீதாவை ஆசிரமத்தில் துன்புறுத்தி, கொலை செய்துள்ளதாக பெங்களூரு ராம் நகர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறையினர் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என அவரது தாய் ஜான்சிராணி தெரிவிக்கிறார்.  சங்கீதா இறந்த துக்கத்தில் அவரது தந்தையும் உயிரிழந்ததாக கூறும் ஜான்சிராணி, ஆசிரமத்தில் உள்ள பல பெண்களுக்கு இதேபோன்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், பல பேர் துன்புறுத்தப்பட்டு கொலைச்செய்யப்படுவதாகவும் தெரிவிக்கிறார்.