நித்தியானந்தாவுக்கு தீவு வாங்க பணத்தைக் கொட்டிக்கொடுத்த பெண் தொழிலதிபர்! – குஜராத் போலீஸ் அதிர்ச்சி

 

நித்தியானந்தாவுக்கு தீவு வாங்க பணத்தைக் கொட்டிக்கொடுத்த பெண் தொழிலதிபர்! – குஜராத் போலீஸ் அதிர்ச்சி

பிரபல சாமியார் நித்தியானந்தா ஒரு தீவை விலைக்கு வாங்கும் யோசனையைக் கேட்டு தீவு வாங்க பல கோடிகளைக் குஜராத்தைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெண்கள் கடத்தல், பாலியல் வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, கரீபியன் தீவுகள் பகுதியில் தீவு ஒன்றை வாங்கி தனி நாடாக அறிவிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

பிரபல சாமியார் நித்தியானந்தா ஒரு தீவை விலைக்கு வாங்கும் யோசனையைக் கேட்டு தீவு வாங்க பல கோடிகளைக் குஜராத்தைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

manjula

பெண்கள் கடத்தல், பாலியல் வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, கரீபியன் தீவுகள் பகுதியில் தீவு ஒன்றை வாங்கி தனி நாடாக அறிவிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தனி நாடு வாங்கும் அளவுக்கு நித்தியானந்தாவுக்கு பணம் எப்படி வந்தது என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கு கோடிகளைக் கொட்டிய குஜராத்தைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அவரைப் பற்றி தீவிரமாக விசாரித்தபோது முறைகேடு செய்து சி.பி.எஸ்.இ அங்கீகாரம் பெற்றது தெரியவந்துள்ளது. தற்போது அவரும் சிக்கலில் மாட்டியுள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்தவர் பிரபல பெண் தொழிலதிபர் மஞ்சுளா புஜாரா. இவர் குஜராத்தில் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். தீவிர சிவ பக்தை. சில ஆண்டுகளுக்கு முன்பு பிடதி ஆசிரமத்துக்கு வந்து நித்தியானந்தாவை சந்தித்துள்ளார். தான்தான் சிவன், மகாதேவ் என்று பல வகைகளில் நித்தியானந்தா பேசியது மஞ்சுளாவை ஈர்த்தது. அதனால், நித்தியானந்தாதான் சிவன் என்று அவர் நம்பினார் (நம்பிக்கை தனிமனித உரிமை சார்ந்தது, அதைப் பற்றி டாப் தமிழ் எந்த கருத்தையும் விமர்சனத்தையும் முன் வைக்கவில்லை). 

nithi

மஞ்சுளா புஜாரா பல கோடிகளுக்கு அதிபதி என்று தெரிந்துகொண்ட நித்தியானந்தா, அவரிடம் பேசி நிதி உதவிகளை வாங்கியுள்ளார். மேலும், குஜராத்தில் ஆசிரமம் தொடங்க வேண்டும் என்ற விருப்பத்தையும் கூறியுள்ளார். உடனே தன்னுடைய பள்ளிகளில் ஒன்றில் ஆசிரமத்தைத் தொடங்க அவர் அனுமதி அளித்துள்ளார். அப்படித்தான் குஜராத்தில் நித்தியானந்தா ஆசிரமத்தைத் தொடங்கி, குருகுலம் என்று பள்ளி ஒன்றையும் தொடங்கியுள்ளார்.
இந்தியாவில் பிரச்னைகள் ஏற்பட்டு போலீஸ் தேடவே நித்தியானந்தா நேபாளம் வழியாக தப்பியதாகக் கூறப்படுகிறது. நாடு இல்லாமல் அவதியுறுகிறேன் என்று மஞ்சுளா உள்ளிட்டவர்களிடம் சொல்லி, தனி நாடு வாங்கப் போகிறேன் என்று மீட்டர் போட்டுள்ளார் நித்தியானந்தா. அவரது பேச்சை நம்பி தீவு வாங்குவதற்காக பலரும் பல கோடிகளை கொட்டியுள்ளனர். அதில் மஞ்சுளா மட்டும் 6 கோடி ரூபாய் வரை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

manjula

இவை அனைத்தையும் தெரிந்துகொண்ட போலீசார், பள்ளியின் அங்கீகாரம் உள்ளிட்டவை சரியாக உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாநில கல்வித் திட்டத்தில் பள்ளியை நடத்த அனுமதி வாங்கிய மஞ்சுளா புஜாரா, ஆவணங்களில் முறைகேடுகள் செய்து சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கான அனுமதி பெற்றதை கண்டறிந்துள்ளனர். இதையடுத்து அவர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.