நிதி நிலை முடிவுகள், கொரோனா வைரஸ் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும்….. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

 

நிதி நிலை முடிவுகள்,  கொரோனா வைரஸ் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும்….. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

ரூபாயின் வெளிமதிப்பு, நிறுவனங்களின் நிலை முடிவுகள் மற்றும் கொரோனா வைரஸ் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்களது கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. இந்த வாரம் கோத்ரெஜ் பிராப்பர்ட்டிஸ், பந்தன் வங்கி, நெஸ்லே, கோடக் மகிந்திரா வங்கி மற்றும் மாருதி சுசுகி உள்பட பல முன்னணி நிறுவனங்கள் இந்த வாரம் தங்களது கடந்த மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிடுகின்றன. கடந்த மார்ச் மாத தொழில்துறை உற்பத்தி மற்றும் கடந்த ஏப்ரல் மாத சில்லரை மற்றும் மொத்த விலை பணவீக்கம் தொடர்பான புள்ளிவிவரங்கள் இந்த வாரம் வெளிவருகிறது.

கோடக் மகிந்திரா வங்கி

தொற்றுநோயான கொரோனா வைரஸ் உலகமெங்கும் தீவிரமாக பரவி வருகிறது. நம் நாட்டில் தற்சமயம் சுமார் 63 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,100க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். வரும் வாரம் லாக்டவுனின் கடைசி வாரம். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதால் கடுமையான கட்டுப்பாட்டுகளுடன் லாக்டவுன் தொடரலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு ரூ.75 என்ற அளவில் உள்ளது. இந்தியாவின் எரிபொருள் தேவை கடந்த ஏப்ரல் மாதத்தில் 45.8 சதவீதம் குறைந்தது. எரிபொருள் தேவையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்படும். இதுதவிர சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்களும் வரும் வாரத்தில் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கத்தை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.