“நிச்சயம் செய்துட்டு நிர்க்கதியாக்கிட்டு போயிட்டியே” கட்டிக்க மறுத்த பெண்ணை மிரட்டிய டாக்டர்.

“நிச்சயம் செய்துட்டு நிர்க்கதியாக்கிட்டு போயிட்டியே” கட்டிக்க மறுத்த பெண்ணை மிரட்டிய டாக்டர்.

ஒரு டாக்டரை நிச்சயம் செய்து விட்டு, திடீரென கட்டிக்க மறுத்த பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த டாக்டரை போலீஸ் தேடுகிறது .

“நிச்சயம் செய்துட்டு நிர்க்கதியாக்கிட்டு போயிட்டியே” கட்டிக்க மறுத்த பெண்ணை மிரட்டிய டாக்டர்.

குஜராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த 26 வயதான மருத்துவர் விதி ஷா என்பவர் ஷா மெஹுல் மேத்தா என்ற மற்றொரு பெண் மருத்துவரிடம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஆனால் அதன் பிறகு அவர்கள் அடிக்கடி சமூக ஊடகங்கள் மூலமாகவும் ,போன் மூலமாகவும் பேசி வந்தனர் .அப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது .அந்த பெண் மருத்துவருக்கு ஷாவின் சுயரூபம் தெரிந்து விட்டது .அவரின் தவரான பேச்சால் அவருக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட்டதும் அவரை கட்டிக்க முடியாது என்று கூறி விட்டார்
அதனால் மிகவும் கொதிப்படைந்த டாக்டர் ஷா அந்த பெண் மருத்துவரை பழி வாங்க முடிவு செய்தார் .அதனால் அந்த பெண் மருத்துவர் மேத்தாவை மிரட்டி ஒரு போலி மெயில் மூலம் மிரட்டல் கடிதம் அனுப்பினார் .
அதில் ஷா தான் அந்த பெண் மருத்துவர் மேத்தாவை கொலை செய்து விடுவதாகவும் அவரை வாழ விடமாட்டேனென்றும் ‘இனி என்ன நடக்கிறது பா’ர் என்று மிரட்டும் விதமாக மெயில் அனுப்பினார் .
அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் மேத்தா அந்த ஷா மீது சைபர் க்ரைம் போலீசில் புகார் கூறினார் ..மேத்தா அளித்த புகாரின் பேரில் சைபர் செல் உடனடியாக செயல்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கத் தொடங்கியது. குற்றவாளி ஷாவைக் கண்டுபிடிப்பதற்காக மின்னஞ்சல்களை அனுப்ப பயன்படும் ஐபி முகவரி பதிவை பயன்படுத்தி அவரை கண்டுபிடிக்க முடிந்தது. இது பற்றி கூறிய ஒரு போலீஸ் அதிகாரி, “நாங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடித்து கைது செய்வதற்கு முன்பாக கோவிட் சோதனைக்கு அனுப்பியுள்ளோம்” என்று கூறினார்.

“நிச்சயம் செய்துட்டு நிர்க்கதியாக்கிட்டு போயிட்டியே” கட்டிக்க மறுத்த பெண்ணை மிரட்டிய டாக்டர்.