நிச்சயதார்த்த மோதிரத்தை கண்ணாடி ஜன்னல் வழியாக தாத்தாவிடம் காட்டிய பேத்தி – வைரலாகும் புகைப்படம்

 

நிச்சயதார்த்த மோதிரத்தை கண்ணாடி ஜன்னல் வழியாக தாத்தாவிடம் காட்டிய பேத்தி – வைரலாகும் புகைப்படம்

ஒரு பேத்தி தனக்கு நிச்சயதார்த்தம் ஆனதை தனது தாத்தாவிடம் கண்ணாடி ஜன்னல் வழியாக தெரிவித்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

வாஷிங்டன்: ஒரு பேத்தி தனக்கு நிச்சயதார்த்தம் ஆனதை தனது தாத்தாவிடம் கண்ணாடி ஜன்னல் வழியாக தெரிவித்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 155 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு 9201 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 205 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். அமெரிக்காவில் 108 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர்.

ttn

இந்த நிலையில், ஒரு பேத்தி தனக்கு நிச்சயதார்த்தம் ஆனதை தனது தாத்தாவிடம் கண்ணாடி ஜன்னல் வழியாக தெரிவித்த சம்பவம் அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் நடந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இருவரும் நேரடியாக அருகில் சந்திக்க முடியாத கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் தன்னுடைய விரலில் இருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை தனது தாத்தாவிடம் பேத்தி காண்பித்தார். இந்த சம்பவத்தின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.