நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா – ரூ.558, ரூ.398 பிரீபெய்டு திட்டங்களை அறிவித்தது வோடபோன் ஐடியா!

 

நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா – ரூ.558, ரூ.398 பிரீபெய்டு திட்டங்களை அறிவித்தது வோடபோன் ஐடியா!

வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.558, ரூ.398 விலைகளில் இரு பிரீபெய்டு திட்டங்களை அறிவித்திருக்கிறது.

மும்பை: வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.558, ரூ.398 விலைகளில் இரு பிரீபெய்டு திட்டங்களை அறிவித்திருக்கிறது.

வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.558, ரூ.398 விலைகளில் இரு பிரீபெய்டு திட்டங்களை அறிவித்திருக்கிறது. இந்த இரு திட்டங்களிலும் ஒரே விதமான சலுகைகளே வழங்கப்படுகின்றன. ஆனால் வேலிடிட்டி மட்டும் மாறுபடுகிறது.

vodafone

நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ்கால், நாளொன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ், வோடபோன் பிளே மற்றும் ஜீ5 ஆப்களுக்கான ஓராண்டு சந்தா ஆகிய சலுகைகள் இந்த புதிய பிரீபெய்டு திட்டத்தில் வழங்கப்படுகிறது.

vodafone idea

உண்மையில் வோடபோன் பிளே சந்தாவின் மதிப்பு ஓராண்டுக்கு ரூ.499 மற்றும் ஜீ5 சந்தாவின் மதிப்பு ரூ.999 ஆகும். ஆனால் மேற்கண்ட இரு ரீசார்ஜ்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தும்போது இவ்விரு ஆப்களை இலவசமாக பயன்படுத்த முடியும். மேலும் ரூ.558 ரீசார்ஜ் செய்தால் 56 நாட்களும், ரூ.398 ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களும் வேலிடிட்டி அளிக்கப்படுகிறது. இப்போதைக்கு மும்பை மற்றும் மத்திய பிரதேசத்தில் மட்டும் இவ்விரு பிரீபெய்டு திட்டங்களும் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.