நாளை நடக்கவிருக்கும் வானியல் அதிசயம்! பூமிக்கு ஆபத்தா?

 

நாளை நடக்கவிருக்கும் வானியல் அதிசயம்! பூமிக்கு ஆபத்தா?

விண்வெளியில் சூரியனை புதன் கிரகம் கடந்து செல்லும் அரிய நிகழ்வு நாளை நிகழவுள்ளது.

விண்வெளியில் சூரியனை புதன் கிரகம் கடந்து செல்லும் அரிய நிகழ்வு நாளை நிகழவுள்ளது.

சூரியனுக்கு மிக அருகிலுள்ள கோளான புதன் ஒவ்வொரு 88 நாட்களுக்கு ஒருமுறையும் சூரியனை சுற்றிவருகிறது.  சூரியன், புதன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது மட்டுமே புதன் கிரகம் சூரியனை கடந்து செல்லும் நிகழ்வை நம்மால் காண முடியும். ஆனால் இந்த அரிய நிகழ்வு ஒரு நூற்றாண்டில் 13 முறை மட்டுமே நிகழும் என்கின்றனர் அறிவியல் ஆய்வாளர்கள். 

mercury

புதன் சூரியனை விட சிறிதாக இருப்பதால் இந்த நிகழ்வு சிறிய கரும்புள்ளியாக மட்டுமே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. சுமார் ஐந்தரை மணி நேரம் நடைபெறவுள்ள இந்த நிகழ்வை வெறும் கண்களால் பார்ப்பது ஆபத்து என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த நிகழ்வை அமெரிக்காவின் சில பகுதிகள் மற்றும் கனடாவில் முழுமையாகவும், தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவில் பகுதியளவும் தெரியும் என சொல்லப்படுகிறது. ஆனால் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்நிகழ்வை காண இயலாது.

sun

இந்தியாவில் 1999, 2003, 2006, 2016 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரிய நிகழ்வை நாளை காணலாம். அடுத்து 2032ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதிதான் புதன் கிரகம், சூரியனை கடக்கும் அரிய நிகழ்வு வானில் நிகழும்.