நாளை கட்சி பெயரை அறிவிக்கிறார் ரஜினிகாந்த்?! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

 

நாளை கட்சி பெயரை அறிவிக்கிறார் ரஜினிகாந்த்?! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஒரு விஷயத்தில் எனக்கு தனிப்பட்ட முறையில் திருப்தி இல்லை. ஏமாற்றம் தான். அதை பற்றி பின்னர் தெரிவிக்கிறேன்’ என்றார்.

2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என்று அறிவித்த ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால்  ரஜினி தலைமையில் கடந்த 5 ஆம் தேதி  சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

ttn

கூட்டம் முடிந்து சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், ‘கட்சி தொடங்குவது பற்றி ஓராண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களைச் சந்தித்து பேசினேன். கட்சி தொடங்கும் விவகாரத்தில் நிர்வாகிகளுக்குப் பல விஷயங்களில்  திருப்தி. ஆனால் ஒரு விஷயத்தில் எனக்கு தனிப்பட்ட முறையில் திருப்தி இல்லை. ஏமாற்றம் தான். அதை பற்றி பின்னர் தெரிவிக்கிறேன்’ என்றார்.

ttn

இதையடுத்து  ரஜினி மீண்டும் நாளை காலை 8 மணிக்கு மாவட்ட செயலாளர்களை ராகவேந்திரா மண்டபத்திற்கு வர அழைப்பு விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.  ஏற்கனவே 5 ஆம் தேதி நடத்திய கூட்டத்தில் தனக்கு ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை என்று கூறிய ரஜினி, அது குறித்து மீண்டும் ஆலோசிக்க உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ttn

இந்நிலையில் ரஜினிகாந்த் நாளை காலை 10 மணிக்கு சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார். அதில் கட்சி தொடங்குவது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதாவது ரஜினி கட்சியின் பெயரை அறிவிக்க வாய்ப்புள்ளது என்றும் கட்சித் தொடங்கப்போகும் நாள், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள்  குறித்தும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.