நார்த்தாமலை அருகே சுனை லிங்க வழிபாட்டிற்காக காத்து இருக்கும் மக்கள்

 

நார்த்தாமலை அருகே சுனை லிங்க வழிபாட்டிற்காக காத்து இருக்கும் மக்கள்

நார்த்தாமலை மேலமலையில் சுனை லிங்க வழிபாட்டிற்காக சுனை நீரை வெளியேற்றும் பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. 

புதுக்கோட்டை : 

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது  நார்த்தாமலை. இவ்வூர் மேலமலை, கோட்டைமலை, கடம்பர் மலை, உவச்சன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண் மலை, பொன் மலை ஒன்பது மலைகளை கொண்டுள்ளது.

narththaamali

இந்த இடத்தில் சமணர்கள் முற்காலத்தில் வாழ்ந்ததற்கான கல்வெட்டுகளும், சிற்பங்களும் காணப்படுகின்றன. மேலும் சுனை லிங்கம் உள்ளிட்ட இந்த மலையில் பல்வேறு வரலாற்று நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ளதாக மக்களால் இன்றளவும் நம்பப்பட்டு வருகின்றது.

இந்தப் மலைப்பகுதி தொல்லியல் துறையின் பொறுப்பில் இருக்கும் பகுதியாகும். இங்கு உள்ள மேலமலைப் பகுதியில் இருக்கும் விஜயாலய சோழீச்சுரம் கோயிலுக்கு கீழ் ஒரு சுனை உள்ளது.

narththaamalai

சுனைக்கு மேற்பகுதியில் தொண்டைமான் குறித்த இரண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சுனை லிங்கம் அமைந்துள்ள பகுதியினை தற்பொழுது கண்டுபிடிக்கும் முயற்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் .

இதற்காக அவர்கள் தொல்லியல் துறையின் முறையான அனுமதியினை பெற்று  அதன்பின் தற்போது தொல்லியல் துறை அனுமதியோடு மோட்டார்களைக் கொண்டு சுனை நீரை இறைக்கும் பணி தொடங்கியுள்ளது.

சுமார் 20 அடிக்கும் மேல் ஆழம் இருக்கும் இந்தச் சுனை நீரை வெளியேற்றும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகின்றது .

narthamalai

சுனை லிங்க தரிசனம் இந்த மலையில் விரைவில்  நடைபெறுவதினை முன்னிட்டு அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் மலையினை சுற்றி அமர்ந்துகொண்டு சுனைலிங்க தரிசனத்தினை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர் .

இரண்டு மாதங்களுக்கு முன் சித்தன்னவாசலில் இதே போன்ற ஒரு சுனைலிங்க வழிபாட்டை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிகழ்த்தினர் என்பது குறிப்பிட தக்க ஒன்றாகும்.