நாய்க்கு மயக்க பிஸ்கட் கொடுத்து 137 சவரன் நகை அபேஸ் : கேரளாவில் பிடிபட்ட கொள்ளையன்!

 

நாய்க்கு மயக்க பிஸ்கட் கொடுத்து 137 சவரன் நகை அபேஸ் :  கேரளாவில் பிடிபட்ட கொள்ளையன்!

டிவிஆர்-ஐயும் லாவகமாக திருடிச்சென்றனர். இதுகுறித்து கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். 

கோவை:  கோவை இடையர்பாளையம் லூனா அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கான்ட்ராக்டர் கனகராஜ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். அப்போது அவரது நாய்க்கு மயக்க பிஸ்கட் கொடுத்து மர்மநபர்கள் வீட்டிலிருந்த 137 சவரன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள், 15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை  திருடி சென்றனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமிராக்களை உடைத்து, காட்சிகள் பதிவாகும் டிவிஆர்-ஐயும் லாவகமாக திருடிச்சென்றனர். இதுகுறித்து கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். 

ttn

இந்நிலையில் கேரள மாநிலம் – மண்ணுத்தி காவலரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் பிடிபட்ட ஒருவரிடம் நடத்திய விசாரணையில், கோவை – இடையர்பாளையம் கான்ட்ராக்டர் கனகராஜ் வீட்டில் நடந்த கொள்ளை உட்பட மூன்று வீடுகளில் கைவரிசை காட்டியது தான்தான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து கேரள போலீசார் வீட்டில் 137 சவரன் நகைகள் கொள்ளை உட்பட மூன்று வீடுகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து கேரள காவல்துறையினர் துடியலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்மந்தப்பட்ட கொள்ளையனைக் காவலில் எடுத்தனர். 

ttn

அதில் பிடிபட்டவர்  மதுரை ஆரப்பாளையம் புட்டுத்தோப்பை  சேர்ந்த பட்டறை சுரேஷ் என்பது  தெரியவந்தது. பட்டறை சுரேஷ் தமிழகத்தில் நடந்த பலகொள்ளைச் சம்பவங்களில் தேடப்பட்டு  வந்த முக்கிய குற்றவாளி என்பதை போலீசார் அறிந்தனர். இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளை சம்பவங்களில் ராஜசேகரன், பாண்டித்துரை, மாரியப்பன் என்கிற கருவாட்டு மாரியப்பன், சுரேஷ் என்கிற சுர்லா சுரேஷ் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது தலைமறைவாகியுள்ள நால்வரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். அத்துடன் பட்டறை சுரேஷிடமிருந்து 20 சவரன் நகை மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.