நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு ஓட்டு! வேட்பாளரின் குடும்பத்தினர் கூட ஓட்டுப்போடலயா?

 

நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு ஓட்டு! வேட்பாளரின் குடும்பத்தினர் கூட ஓட்டுப்போடலயா?

திருச்சி மணப்பாறை ஊராட்சியில் சீமான் கட்சிக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மணப்பாறை ஊராட்சியில் சீமான் கட்சிக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான  91,975 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில்  76.19 %  வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகளும் பதிவாகியது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. இந்நிலையில்  திமுக கூட்டணி மாவட்ட கவுன்சிலர் பதவியிலும், ஊராட்சி ஒன்றியத்துக்கான பதவிகளிலும் அதிகமான வாக்குகள் வெற்றி வெற்றிப்பெற்றுள்ளது.

சீமான்

இந்நிலையில் திருச்சி மணப்பாறை ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு ஒரே ஒரு வாக்கு மட்டுமே கிடைத்துள்ளது. அந்த வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டு பெற்றுள்ளார் என்றால் வேட்பாளரின் குடும்பத்தினர் கூட ஓட்டு போடவில்லையா? என்ற கேள்வி எழுகிறது. அதோடு, பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 10 ஓட்டுக்கள் முதல் 50 ஓட்டுக்கள் வரை மட்டுமே பெற்றிருப்பது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் 11- வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக போட்டியிட்ட சுனில் என்ற ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.