நான் முன்னாலே போறேன்…நீ பின்னாலே வாடி; இந்திய கிரிக்கெட் வீரர்கள் சோகம்!

 

நான் முன்னாலே போறேன்…நீ பின்னாலே வாடி; இந்திய கிரிக்கெட் வீரர்கள் சோகம்!

12-வது 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற மே 30-ம்தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது

மும்பை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு  செல்லும் வீரர்களின் ஆசைக்கு ஆப்படிக்கும் விதமான முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அதன்படி, 12-வது 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற மே 30-ம்தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது.

wags

இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.

உலகக் கோப்பையில் பங்குபெறும் இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணி, இந்த முறையும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது.

virat

இந்நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு செல்லும் இந்திய அணிக்கான பயணக் கொள்கைகளை பிசிசிஐ இறுதி செய்துள்ளது. அதன்படி, உலகக் கோப்பை போட்டிக்கு செல்லும் இந்திய வீரர்கள் அவர்களது மனைவி, காதலிகளை உடன் அழைத்துச் செல்ல முதல் அடுத்த 20 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வீரர்கள் செல்லும் பேருந்தில் அவர்காளது மனைவி, காதலிகள் செல்ல முடியாது. அவர்கள் தனியாக வேறு பேருந்திலோ அல்லது தனியார் போக்குவரத்தையோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

dhoni

இந்திய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களுக்கு மனைவி மற்றும் காதலிகள் உள்ளனர். பிசிசிஐ-ன் முந்தைய விதிகளின் படி, மனைவி, காதலிகளை வீரர்கள் அழைத்து செல்ல முடியும். ஆனால், அது அவர்களுக்கு உத்வேகத்தை கொடுகிறது என்றும், கவனக்குறைவை ஏற்படுத்துகிறது என்றும் கலவையான விமர்சனங்கள் எழுந்தன.

virat

முன்னதாக, , உலகக் கோப்பையின் போது, வீரர்களின் மனைவிகள் உடன் இருப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை, பிசிசிஐ-யுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது வீரர்கள் முக்கியமாக முன் வைத்திருந்தனர். குறிப்பாக, சர்வதேச போட்டிகளின் போது, பெரும்பாலும் தனது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவுடன் காணப்படும் விராட் கோலி, மனைவி, காதலிகளை வீரர்களுடன் அனுமதிக்க வேண்டும் என பிசிசிஐ-யிடம் அனுமதி கோரியிருந்தார்.

இதையும் வாசிங்க

கிரிக்கெட் வீராங்கனையை திருமணம் செய்து கொண்ட நியூசிலாந்து வீராங்கனை!