நான் பிரமலைக் கள்ளர்: வைரமுத்துவின் சாதி பெருமையால் உண்டான சர்ச்சை!

 

நான் பிரமலைக் கள்ளர்: வைரமுத்துவின் சாதி பெருமையால் உண்டான சர்ச்சை!

கவிஞர் வைரமுத்து தனது சாதியை சுட்டிக்காட்டி பெருமைப்பட்டுக் கொண்ட சர்ச்சை வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மதுரை: கவிஞர் வைரமுத்து தனது சாதியை சுட்டிக்காட்டி பெருமைப்பட்டுக் கொண்ட சர்ச்சை வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

கவிஞர்  வைரமுத்து எப்போதும் தன்னை படைப்பாளியாக மட்டுமே முன்னிறுத்துவார். எந்தவொரு இடத்திலும் தன்னுடைய மதத்தினை பற்றியோ  தான் சார்ந்துள்ள சாதியினை பற்றியோ எந்தவொரு இடத்திலும் வெளிப்படுத்தியது இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆனால் இந்த பெருமைகள் எல்லாம் நேற்றோடு முடிவுக்கு வந்துவிட்டது.

 

எப்படி தெரியுமா?

மதுரை மாவட்டத்தில் நடந்த  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வைரமுத்து மேடையில் பேசும்போது , ‘எனக்குள்ள பெருமையெல்லாம் பிரமலைக் கள்ளர் என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை! என் இனத்தின் மீது சொல்லப்பட்ட பழி, குற்றப்பரம்பரை…குற்றப்பரம்பரை …குற்றப்பரம்பரை என்பதுதான். அது எழுத்துப் பிழையான வாசகம். கொற்றப்பரம்பரை என்று அழைக்கப்பட வேண்டுமே தவிர, குற்றப்பரம்பரை என்று அழைக்கப் படக்கூடாது. உங்கள் அறிவை வெல்வதற்கு இந்த உலகில் ஆள் இல்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று சொல்லும் போது அரங்கமே கை தட்டல்களால் அதிர்ந்தது.

எதுக்கு ஜாதி அடையாளம்?

ஏழு முறை விருது வாங்கிய கவிஞருக்கு இப்ப எதுக்கு ஜாதி அடையாளம்? என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.