‘நான் பாஜக ஆதரவாளர் என்று பச்சை குத்துகிறார்கள்’: ரஜினிகாந்த் வேதனை!?

 

‘நான் பாஜக ஆதரவாளர் என்று பச்சை குத்துகிறார்கள்’: ரஜினிகாந்த் வேதனை!?

பாஜகவுடன் தன்னை தொடர்புப்படுத்தி வெளியாகும் செய்திகளால் தன் மீது பாஜக ஆதரவாளர் என்ற முத்திரை குத்தப்படுவதாக மன்ற நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்ததாகத் தெரிகிறது.

சென்னை:  பாஜகவுடன் தன்னை தொடர்புப்படுத்தி வெளியாகும் செய்திகளால் தன் மீது பாஜக ஆதரவாளர் என்ற முத்திரை குத்தப்படுவதாக மன்ற நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்ததாகத் தெரிகிறது.

கடந்த 2017ம் ஆண்டு அரசியல்  வருகையை உறுதி செய்த ரஜினிகாந்த் அதன் பிறகு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அவ்வப்போது சில விவகாரங்கள் குறித்து பேட்டியளித்த வரும் அவர், படங்களில் நடிப்பதில் அக்கறை காட்டி வருகிறார். குறிப்பாக  மக்களவை தேர்தலில் அவரது நண்பரும், மக்கள் நீதி மய்யத்தின்  தலைவருமான தலைவருமான கமல் ஹாசன் களம்கண்ட நிலையிலும், தன்னுடைய இலக்கு சட்டமன்ற தேர்தல் தான் என்றார். அவ்வப்போது ரஜினி சில சர்ச்சை கருத்துக்கள் அவர் மீது  பாஜக ஆதரவாளர் என்ற முத்திரையைப் பதித்துள்ளது. 

rajini

இந்நிலையில் தர்பார் படப்பிடிப்பு முடிந்து ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த், தனது வீட்டில் மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.  இதுதொடர்பாக பிரபல நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘குடிநீர் பற்றாக்குறையின் போது மக்கள் மன்றத்தின் பணிகள், அடுத்த ஆண்டு இயக்கம் சார்பில் மாநாடு நடத்தத் திட்டம் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. 

rajini

மேலும் தான் ஆன்மீக பாதையில் செல்வேன்.பாஜகவுடன்  என்னை தொடர்புப்படுத்தி சிலர் செய்தி வெளியிடுகின்றனர். இது சிறுபான்மையினரிடம்  என்னை பிரிப்பதற்காக நடக்கும் சதித்திட்டம் என்று வேதனை தெரிவித்திருப்பதாகவும், தனிக்கட்சி தொடங்கும் முடிவிலிருந்து தான் பின்வாங்கப்போவதில்லை என்று உறுதி கூறியதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.