நான் கொரோனா வைரஸ் நோயாளி… கையில் சீல் வைத்த மகாராஷ்டீரா அரசு

 

நான் கொரோனா வைரஸ் நோயாளி… கையில் சீல் வைத்த மகாராஷ்டீரா அரசு

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸால் 139 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துவருகின்றன. கொரோனா வைரஸ் எதிரொலியால் தமிழகத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பார்கள், கிளப்புகள், நீச்சல் குழந்தைகள் அனைத்தையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. உத்தரவை மீறி திறந்தால் சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

seal

இந்நிலையில், கொரோனாவைரஸ் பாதிப்புக்குள்ளாகி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை அடையாளம் காணும் வகையில் மகாராஷ்டிரா அரசு புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்படுபவர்களை,  மற்றவர்கள் அடையாளம் காணும் வகையில் அவர்களது கை மணிக்கட்டு பகுதியில், முத்திரை குத்தப்படுகிறது. நான் கொரோனா பாதிப்பு அறிகுறி உள்ளவன் என்பதை தெரிவிக்கும் வகையில் அந்த முத்திரையில் எழுத்துக்கள் உள்ளது. மும்பை மாநகரின் பல பகுதிகளிலும் முத்திரைகள் குத்தும் பணிகளை சுகாதாரத் துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். முத்திரை குத்தப்பட்டவர்கள்,  வீடுகளை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிர அரசு எச்சரித்துள்ளது