‘நான் ஒன்னும் கதாநாயகி இல்லை’: அஜித் பட நாயகி பதிவு 

 

‘நான் ஒன்னும் கதாநாயகி இல்லை’: அஜித் பட நாயகி பதிவு 

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் கதாநாயகி இல்லை என்று பதிவிட்டுள்ளார். 

சென்னை: நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் கதாநாயகி இல்லை என்று பதிவிட்டுள்ளார். 

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் இவன் தந்திரன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து விக்ரம் வேதா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தற்போது இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் அஜித்தின்  நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்க பயோவில் கதாநாயகி அல்ல நடிகை என்று பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘கதாநாயகன், கதாநாயகி என்ற வார்த்தைகள் உண்மையிலேயே நடிகர் என்ற வார்த்தைக்கு இடக்காது. கதாநாயகன் என்று சொன்னால் அடித்து நொறுக்க வேண்டும். 

heroine

கதாநாயகி என்றால் கிளாமராக இருக்க வேண்டும். நான் ஒன்றும் அப்படி இல்லை. நடிகை என்று சொன்னால் அவர் நன்றாக நடிப்பவர் என்றும் கதாபாத்திரத்தைத் தோற்றத்தால் கொண்டு வருபவர் என்றும் அர்த்தம். கதாநாயகி என்ற வார்த்தை எனக்கு மிகவும் பயமுறுத்துவதாக உள்ளது. ஆனால், இப்போது அதைப்  நானே பயன்படுத்தி வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.