நான் எப்படி துணை வேந்தராக நியமிக்கப்பட்டேன்? சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி விளக்கம்

 

நான் எப்படி துணை வேந்தராக நியமிக்கப்பட்டேன்? சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி விளக்கம்

சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நான் எப்படி நியமிக்கப்பட்டேன் என துரைசாமி விளக்கமளித்துள்ளார்.

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நான் எப்படி நியமிக்கப்பட்டேன் என துரைசாமி விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் கலந்து கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த காலங்களில் துணை வேந்தர் பதவிக்காக கோடிக்கணக்கான ரூபாய் கைமாறி இருப்பதை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். துணைவேந்தர் நியமனத்திற்காக கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியதை என்னால் நம்பமுடியவில்லை. கடந்த காலங்களில் பணம் கைமாறியதை தெரிந்து கொண்ட பிறகு எனக்கு வருத்தம் ஏற்பட்டது எனவே தற்போது தகுதி அடிப்படையில் மட்டுமே துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்றார்.

ஆளுநரின் இந்த குற்றச்சாட்டு அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன், துணைவேந்தர் நியமனத்துக்கும் உயர்கல்வித்துறைக்கும் சம்பந்தமில்லை. துணைவேந்தரை நியமிப்பது ஆளுநர்தான்.. தேடுதல் குழு அமைப்பதுடன் அரசின் பணி முடிந்துவிடுகிறது. ஆளுநர் எதை மனிதில் வைத்து இப்படி பேசினார் என்று தெரியவில்லை என்றார்.

இந்நிலையில்  சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,  தகுதியின் அடிப்படையில்தான் நான் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டேன். சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக விதிமுறைகளின்படியே ஆளுநர் வித்யா சாகர் ராவ் என்னை நியமனம் செய்தார் என்றார்.