“நான் என் காதலனை தேடுகிறேன்” ஷெரினின் பதிவை கிண்டல் செய்யும் ரசிகர்கள்!

 

“நான் என் காதலனை தேடுகிறேன்” ஷெரினின் பதிவை கிண்டல் செய்யும் ரசிகர்கள்!

அவரை இந்த விவகாரத்திற்குள் இழுக்கிறார் என்று ஷெரினின் ஆதரவாளர்கள் கருத்து கூறி வருகின்றனர்

கடந்த சில நாட்களாக சனம்  ஷெட்டி – தர்ஷன் விவகாரம் தான் பரவலாக மீடியாக்களில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு ஷெரின் தான் காரணம்  என்று நடிகை வனிதா விஜயகுமார் மறைமுகமாகச் சாடினார்.  இதற்கு ஷெரின் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை.  

 


 

ஷெரினுக்கு தர்ஷன் மீது ஏற்பட்ட ஈர்ப்பு ஏற்பட்டாலும்  அவரின் தனிப்பட்ட வாழ்வில்  நான் எந்த பிரச்னையையும் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன் என்று கூறி விளக்கித்தான்  உள்ளார். தேவையில்லாமல் வனிதா அவரை இந்த விவகாரத்திற்குள் இழுக்கிறார் என்று ஷெரினின் ஆதரவாளர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

 

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு  ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நான் என் காதலரை  தேடுகிறேன் !!!  அனைவர்க்கும் காதலர் தின வாழ்த்துகள். என்னைப் போன்ற சிறந்த பாதியைத் தேடுவோருக்கு ஹேப்பி சிங்கிள்ஸ் அவார்னஸ் டே’ என்று குறிப்பிட்டுள்ளார்.  இதைக்கண்ட  அவரது ரசிகர்கள், நீங்கள் சிங்கிள் தான்னு நம்புறோம் ஷெரினே.. என்று கிண்டலாக கூறி வருகிறார்கள்.