நான் இன்னும் பாஜகவில் இருந்து விலகவில்லை: காயத்ரி ரகுராம் திடீரென்று பல்டி!

 

நான் இன்னும் பாஜகவில் இருந்து விலகவில்லை: காயத்ரி ரகுராம் திடீரென்று பல்டி!

அரசியல் பற்றி கற்றுக்கொள்ள ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டேனே தவிர, பா.ஜ.கவிலிருந்து விலகவில்லை என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். 

சென்னை: அரசியல் பற்றி கற்றுக்கொள்ள ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டேனே தவிர, பா.ஜ.கவிலிருந்து விலகவில்லை என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். 

சார்லி சாப்ளின்,விசில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை காயத்ரி ரகுராம். பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அதில் சர்ச்சையாகப் பேசியது, குடித்துவிட்டு ரோட்டில் விபத்து ஏற்படுத்துவது என்று அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இவர் பெயர் இடம்பிடித்துக் கொண்டே இருந்தது. 

சினிமாவை தொடர்ந்து அரசியலில் பாஜகவில் இணைந்து பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில், காயத்ரிக்கும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

gayathri raguram

இதையடுத்து நேற்று முன்தினம் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அரசியலிலிருந்து விலகி வெளியிலிருந்து கொண்டு எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். அதற்காக கொஞ்சம் இடைவெளி தேவைப்படுகிறது. நான் எந்தக் கட்சியையும் ஆதரிக்கப் போவது இல்லை என்று கூறினார். 

gayathri raguram

இந்த நிலையில் திடீரென்று ‘நான் அரசியலிலிருந்து விலகவில்லை. அரசியல் பற்றி கற்றுக்கொள்ள இடைவெளி எடுத்துக்கொண்டேன் தவிர இன்னமும் பாஜகவில் தான் இருக்கிறேன். மேலும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் அரசியல் கற்க விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.