நான் ஆக்ரோஷ்மாக இருக்கிறேன்… காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த அமித் ஷா…..

 

நான் ஆக்ரோஷ்மாக இருக்கிறேன்… காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த அமித் ஷா…..

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி ஜம்மு அண்டு காஷ்மீரின் ஒரு பகுதியாக நீங்கள் நினைக்காததால் நான் ஆக்ரோஷமாக இருக்கிறேன் என காங்கிரஸ் உறுப்பினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி கொடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று காஷ்மீர் மாநிலத்துக்கு இதுவரை சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 மற்றும் சிறப்பு உரிமைகளை கொடுத்த சடடப்பிரிவு 35ஏ நீக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். மேலும், நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜம்மு அண்டு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2019 தாக்கல் செய்தார். மசோதாவில் அந்த மாநிலம்  ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன்களாக பிரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா வெற்றிகரமாக மாநிலங்களவையில் நிறைவேறியது.

பாக். ஆக்ரமிப்பு காஷ்மீர்

இதனையடுத்து இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில், சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கும் தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார். அதன் பின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அஹிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், நான் நினைக்கிறேன் நீங்கள் பாக் ஆக்ரமிப்பு காஷ்மீர் குறித்து யோசிக்கவில்லை. ஒரே இரவில் மாநிலத்தில் யூனியன் பிரதேசமாக மாற்ற அனைத்து விதிமுறைகளையும் மீறி விட்டீர்கள் என்று குற்றஞ்சாட்டினார்.

ரஞ்சன் சவுத்ரி

இதனையடுத்து அமித் ஷா பேசுகையில், ஜம்மு அண்டு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி.நான் எப்போது ஜம்மு அண்டு காஷ்மீர் குறித்து பேசினாலும், அதில் பாக் ஆக்ரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சாய் சின் ஆகியவையும் அதில் அடங்கும். நீங்கள் பாக் ஆக்ரமிப்பு பகுதி ஜம்மு அண்டு காஷ்மீர் பகுதிக்குள் வரும் என்று நீங்கள் யோசிக்கவில்லை என்பதால் நான் ஆக்ரோஷமாக இருக்கிறேன். இதற்காக உயிரை இழக்கவும் நாங்கள் தயார்.

இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி ஜம்மு அண்டு காஷ்மீர் என்பதை தெளிவாக உறுதிப்படுத்துவதை நான் விரும்புகிறேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை மற்றம் எந்த சட்ட பிரச்சினையும் இல்லை என்று பேசினார். மேலும், வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே என்றும் அமித் ஷா முழங்கினார்.

இதற்கிடையே, சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கம் அரசியலமைப்பின் விதிமீறல், அரசியலமைப்பின் துயரம் என காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசியது குறிப்பிடத்தக்கது.