“நான் அஞ்சு வயசுலேயே ஆட்டைய போட்டவன் ” பல ஆண்டுகள் திருடிய சிறுவன்- பைக்கும் நகையுமாக குவித்த கொடுமை ..

 

“நான் அஞ்சு வயசுலேயே ஆட்டைய போட்டவன் ” பல ஆண்டுகள் திருடிய சிறுவன்- பைக்கும் நகையுமாக குவித்த கொடுமை ..

ஹைதராபாத்தில் 50 க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களைச் செய்துள்ள ஜாதவத் மகேஷ் (19) என்பவரை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ .15 லட்சம் மதிப்புள்ள 37 பவுன் தங்கம், 50 கிலோ வெள்ளி மற்றும் இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்யப்பட்டது.

ஹைதராபாத்தில் 50 க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களைச் செய்துள்ள ஜாதவத் மகேஷ் (19) என்பவரை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர்.
அவரிடமிருந்து ரூ .15 லட்சம் மதிப்புள்ள 37 பவுன் தங்கம், 50 கிலோ வெள்ளி மற்றும் இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்யப்பட்டது.
போலிஸின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் 15 வயதிலிருந்தே கொள்ளைகளுக்கு அடிமையாகி, பல கொள்ளைகளை செய்துள்ளார். இதற்கு முன்பு அவர் வனஸ்தலிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கஜுலராமரத்தில் சிறுவர்களுக்கான அரசு சிறப்பு இல்லத்தில் ரிமாண்ட் செய்யப்பட்டார். அவர் சிறப்பு இல்லத்தில் தங்கியிருந்தபோது, ​​தேசிய கட்டுமான அகாடமிக்கு பிளம்பிங் மற்றும் எலக்ட்ரீஷியன் வகுப்புகளில் கலந்து கொள்ள அனுப்பப்பட்டார். ஆனால் அவர் இந்த ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி தேசிய அகாடமியிலிருந்து தப்பித்து மீண்டும் கொள்ளையடிக்க தொடங்கினார்.
அவர் அப்போது மைனராக  இருந்ததால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டார். ஆனால் இப்போது, ​​அவர் மேஜராகி விட்டதால் நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுவார். மேலும் அவர் செய்த குற்றங்களுக்கு அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் .