நானே சரித்திரமாக மாறிவிட்டேன்: நாடக கலைஞராக வாழ்ந்திருக்கும் விஜய் சேதுபதி!

 

நானே சரித்திரமாக மாறிவிட்டேன்: நாடக கலைஞராக வாழ்ந்திருக்கும் விஜய் சேதுபதி!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

சென்னை: மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள ‘சீதக்காதி’ திரைப்படத்தில் நாடக கலைஞராக வித்தியாசமான தோற்றத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா உள்ளிட்ட 5 முக்கிய கதாநாயகிகள் நடித்துள்ள நிலையில், யாரும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை என கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி நடிக்கும் 25வது திரைப்படமான ‘சீதக்காதி’ திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிச.20ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று காலை வெளியாகி ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வருகிறது.

இந்த டிரைலரில், ‘அய்யா’ என்ற திரைப்பட நடிகர் கதாபாத்திரத்தில் வயதான தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மிகவும் பரபரப்பாக தொடங்கிய இந்த டிரைலரில் கடைசியாக ’ஆடி ஓய்ந்திருக்கும் கிழவன் நான்.. நானே சரித்திரமாக மாறிவிட்டேன்’ என கூறி சோகத்தில் முடிகிறது. உச்ச நடிகராக இருந்த அய்யா ஆதிமூலத்தின் வாழ்க்கை பற்றி அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

விஜய் சேதுபதியின் 25வது படம், ‘நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்’ வெற்றிக் கூட்டணி, விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றம், முதிர்ச்சியான நடிப்பு என ‘சீதக்காதி’ படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.