நாட்டிலேயே மிக உயர்ந்த கொடி கம்பம்: அண்ணா அறிவாலயத்தில் ஏற்றி வைத்தார் மு.க.ஸ்டாலின்

 

நாட்டிலேயே மிக உயர்ந்த கொடி கம்பம்: அண்ணா அறிவாலயத்தில் ஏற்றி வைத்தார் மு.க.ஸ்டாலின்

114 அடி உயர திமுக கொடி கம்பத்தை அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் இன்று ஏற்றி வைத்துள்ளார்.

சென்னை: 114 அடி உயர திமுக கொடி கம்பத்தை அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் இன்று ஏற்றி வைத்துள்ளார்.

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், இந்தியாவின் வேறெந்த கட்சியின் தலைமை அலுவலகத்திலும் அமைந்திடாத வகையிலான 114 அடி உயர திமுக கொடி கம்பம் அமைக்கப்பட்டிருந்தது.

2,430 கிலோ எடை கொண்ட இந்த மாபெரும் கொடி கம்பத்தில் பறக்க விடுவதற்காக, 30 அடி அகலமும், 20 அடி உயரமும் கொண்ட பிரம்மாண்ட திமுக கொடி பிரத்யேமாக தயாரிக்கப்பட்டது. இந்த கொடி இரவிலும் தெரிவதற்காக இரண்டு ஹைபீம் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, கொடிமர பீடத்தில் அலங்கார விளக்குகள் டைமர் ஆட்டோமேட்டிக் சிஸ்டத்துடன் எரிந்து அணையும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இன்னும் 4 நாட்களில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில், இந்த கொடி கம்பத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்துள்ளார்.