நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயார் செய்வது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை….. மத்திய அரசு தகவல்

 

நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயார் செய்வது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை….. மத்திய அரசு தகவல்

நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயார் செய்வது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்தது.

நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், தேசிய குடிமக்கள் தொடர்பான கேள்விக்கு ஒன்றுக்கு, தேசிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) தயார் செய்வது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என தெரிவித்தார். மேலும், மத்திய உள்துறை அமைச்சகம் உறுப்பினர்களின் சில கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது; 

நித்யானந்த் ராய்

இந்த ஆண்டு ஏப்ரல்-செப்டம்பர் காலத்தில் மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ள தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பாக மாநில அரசுகளின் கவலைகள் குறித்து அவர்களிடம் மத்திய அரசு பேசி வருகிறது. தேசிய குடிமக்கள் பதிவேடு புதுப்பித்தலுக்கு விருப்பம் இருந்தால ஆதார் விவரங்களை கொடுக்கலாம்.

ஆதார் கார்டு

பாஸ்போர்ட், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை வைத்திருக்கும் ஒருவர், தேசிய மக்கள்தொகை பதிவேடு பணியின் போது கட்டாயம் வழங்க வேண்டுமா, அப்படி வழங்கவில்லை என்றால் அபாரதம் விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, பதில் அளிப்பவர் தனது அறிவு மற்றும் நம்பிக்கையின் சிறந்த உண்மையான தகவல்களை கொடுக்க வேண்டும். தேசிய மக்கள்தொகை பணிக்காக எந்தவொரு ஆவணங்களும் பெறப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.