நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு

 

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார்

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள தேசிய மற்றும் மாநில கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு பெரும் ஆளுமைகள் இல்லாத தேர்தல் என்பதாலும், ரஜினி, கமல், டிடிவி தினகரன் என புதிய கட்சிகள் முளைத்துள்ளதால் எதிர்வரவுள்ள நாடாளுமன்ற தேர்தல் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய கட்சிகளை பொறுத்தவரை, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக-வும், மீண்டும் ஆட்சி கட்டிலில் ஏறும் முனைப்புடன் காங்கிரஸ் கட்சியும் தீவிர பணியாற்றி வருகின்றன.

இந்நிலையில், வருகிற 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார். உடல்நலம் காரணமாக தான் போட்டியிட போவதில்லை எனவும், தனது விருப்பத்தை கட்சி மேலிடத்துக்கு தெரிவித்து விட்டதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.