நாடகக் கலைஞர்களை காப்பாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் : கருணாஸ் வேண்டுகோள்!

 

நாடகக் கலைஞர்களை காப்பாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் : கருணாஸ் வேண்டுகோள்!

படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக திரைத்துறை முற்றிலும் முடங்கி போயுள்ளது

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க  மக்களின் நலன் கருதி வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே  பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக திரைத்துறை முற்றிலும் முடங்கி போயுள்ளது. நலிவடைந்தவர்களுக்கு உதவ பெப்சி, நடிகர் சங்கத்தினர் உதவிகளை பெற்று வருகிறார்கள்.

ttn

இந்நிலையில் நடிகரும் எம்எல்ஏ-வுமான கருணாஸ் நாடக நடிகர்களுக்கு உதவ வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியா முழுதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  வீட்டிற்குள்ளேயே இருக்க தமிழக அரசும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதை நாம் அனைவரும் பின்பற்றவேண்டும் தனித்திருக்கும் விழித்திருப்போம் தடுத்திடுவோம்.அதே சமயம் தமிழகத்தில் கல்விக்கூடங்கள் திரையரங்குகள் உள்ளிட்ட என அனைத்துமே 
 மூடப்பட்டுள்ளன. மக்களுக்காக தங்களைத் தாங்களே முடக்கிக் கொண்டு நடைபெறுகின்ற இந்த போராட்டத்தில் பாதிப்புகள் அதிகம் தான்.

 

tt

இது தமிழக அரசு உணர்ந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் ஆயிரம் நிதி உதவி வழங்கி உள்ளது. திரைப்படத்துறை முற்றிலும் முடக்கப்பட்டு உள்ளதால் அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் பாதிப்பு உள்ளதை உணர்ந்து திரைத்துறை சார்ந்த நிதி உதவிகளைச் செய்கின்றனர், அதுவும் வரவேற்கத்தக்கது. அதேபோல் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஆயிரக்கணக்கான நாடக நடிகர்கள் எந்த தொழில் நிலை இன்றி அன்றாட சோற்றுக்கே வழியின்றி உள்ளாவர். இதை திரைத்துறை சார்ந்தோரும் உணரவேண்டும் நாடக கலைஞர்களுக்கு உதவ முன்வரவேண்டும். அதேபோல் தமிழக அரசு அவர்களுக்கு போதிய நிதி உதவி வழங்க வேண்டும்.  ஒரு இக்கட்டான நிலையில் தவிக்கும் நமது மக்களை காப்பது போல் நமது நாடகக் கலைஞர்களையும் காப்பாற்றத் தமிழக அரசு முன்வர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.