‘நாசாவிடம் இருந்து நல்ல பதில் கிடைத்துள்ளது’: விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த இளைஞர் நெகிழ்ச்சி!

 

‘நாசாவிடம் இருந்து நல்ல பதில் கிடைத்துள்ளது’: விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த இளைஞர் நெகிழ்ச்சி!

செப். 17, அக்.14,15, நவ.1 ஆம் தேதி நாசா தங்களது செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தது. அந்த புகைப்படங்களில் விக்ரம் லேண்டரின் பாகங்கள் இருப்பதை நாசா அறியவில்லை. 

கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்க முயன்ற விக்ரம் லேண்டர் கட்டுப்பாட்டை இழந்து நிலவின் மேற்பரப்பில் விழுந்தது. அதனைக் கண்டுபிடிக்க, இஸ்ரோ தீவிர முயற்சி மேற்கொண்டும் எந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை. இஸ்ரோவுடன் இணைந்து நாசாவும் முயற்சிகளை மேற்கொண்டது. அதன் பிறகு, செப். 17, அக்.14,15, நவ.1 ஆம் தேதி நாசா தங்களது செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தது. அந்த புகைப்படங்களில் விக்ரம் லேண்டரின் பாகங்கள் இருப்பதை நாசா அறியவில்லை. 

ttn

மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் சென்னை தரமணியில் லினக்ஸ் கணினி நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார் . இவர் நாசா வெளியிட்ட அந்த புகைப்படங்களையும் 2 கிலோ மீட்டர் தொலைவில் தொடர்பு துண்டிக்கப்பட்ட போது இஸ்ரோ வெளியிட்ட புகைப்படங்களையும் ஆய்வு செய்ததில்,  விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார். நாசாவே கண்டுபிடிக்க முடியாத ஒன்றை என்ஜினியர் மாணவர் கண்டுபிடித்ததால் அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 

ttn

இது குறித்து சண்முக சுப்பிரமணியன் பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இந்த ஆய்வை அவர் தினந்தோறும் 7 மணி நேரம் செய்ததாகவும் இதற்காக வெறும் லேப்டாப் மற்றும் இண்டெர்நெட் மட்டுமே பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, இந்த கண்டுபிடிப்பு குறித்து முதலில் நாசாவிற்கு ட்வீட் அனுப்பினேன், அதன் பின்னர் அந்த குழுவில் இருக்கும் 2 பேருக்கு மெயில் அனுப்பினேன். அதற்கு நாசாவிடம் இருந்து நல்ல பதில் கிடைத்துள்ளது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

ttn

மேலும், இது மிகப்பெரிய முயற்சி தான். இருப்பினும் மிகவும் கடினப்பட்டு இஸ்ரோ செலுத்திய விக்ரம் லேண்டர் 23 கி.மீ தூரத்தில் தரையிறங்காமல் போனது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் கண்டிப்பாக மீண்டும் இஸ்ரோ சந்திராயன்-3  செலுத்தி நிலவில் தரையிறங்க வைக்கும் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.