நாங்க 6 பேரு, எங்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாது – VoW

நாங்க 6 பேரு, எங்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாது – VoW

லட்சுமி மஞ்சு, சுப்ரியா யர்லகடா, ஜான்சி, சுமா கணகலா, ஸ்வப்னா தத், மற்றும் நந்தினி ரெட்டி உள்ளிட்ட ஆறு பெண்களும் இணைந்து இந்த அமைப்பை வெற்றிகரமாக கடந்த ஒரு வருடமாக நடத்தி வருகிறார்கள். இந்த அமைப்பின்வழியே, திரைத்துறையில் பாலியல் தொந்தரவுகள், வசவுகள், துச்சமாக நடத்துதல் என பெண்களை மையமாக வைத்து நிகழ்த்தப்படும் இழிசெயல்களுக்கு எதிரான குரல்கொடுக்க துவங்கப்பட்டதுதான் வாய்ஸ் ஆஃப் விமன்.

Wowக்கு ஸ்பெல்லிங்கூட தெரியலைன்னு கலாய்க்க வேணாம், இது வேற வாவ். தெலுங்கு சினிமாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் குறித்து தகவல் தெரிவிக்கவும், ஆலோசனைக்கும், சட்டபூர்வ மேல்நடவடிக்கைக்கும் உதவும் அமைப்புதான் வாய்ஸ் ஆஃப் விமன் (VoW). ரஜினியின் நெருங்கிய நண்பரும், தெலுங்கு சினிமாவின் மிகமுக்கிய புள்ளிகளில் ஒருவருமான மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சுவின் முயற்சியில் திரைப்படங்களில் பங்காற்றும் பெண்களுக்கான அமைப்பு செயல்பட்டு வருகிறது.

லட்சுமி மஞ்சு, சுப்ரியா யர்லகடா, ஜான்சி, சுமா கணகலா, ஸ்வப்னா தத், மற்றும் நந்தினி ரெட்டி உள்ளிட்ட ஆறு பெண்களும் இணைந்து இந்த அமைப்பை வெற்றிகரமாக கடந்த ஒரு வருடமாக நடத்தி வருகிறார்கள். இந்த அமைப்பின்வழியே, திரைத்துறையில் பாலியல் தொந்தரவுகள், வசவுகள், துச்சமாக நடத்துதல் என பெண்களை மையமாக வைத்து நிகழ்த்தப்படும் இழிசெயல்களுக்கு எதிரான குரல்கொடுக்க துவங்கப்பட்டதுதான் வாய்ஸ் ஆஃப் விமன்.

Lakshmi Manchu

இவர்களின் முயற்சியில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் முயற்சிகளுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. கடந்த வருடம் பாலிவுட்டில் மிகப்பிரலபமாகவும் அதேநேரம் அதிக சர்ச்சைகளையும் ஏற்படுத்திய வாக்கியம் மீ டூ. அதனையொட்டி தெலுங்கு சினிமாவுலகில் நிகழும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டறியவும், களையவும் துவங்கப்பட்டது வாவ். மீ டூ இயக்கம் குறித்த விழிப்புணர்வு துவங்கியது வேண்டுமானால் பாலிவுட்டில் இருக்கலாம், ஆனால் அதில் ஆக்கப்பூர்வமாக செயல்பட துவங்கியது தெலுங்கு சினிமா என்றே சொல்லவேண்டும்.

Taapsee Pannu

மஞ்சுவின் முயற்சிக்கு பேராதர்வு தரும் பாலிவுட் நடிகைகளில் டாப்சி பன்னு முதலிடம் வகிக்கிறார். தெலுங்கு சினிமாவில் மஞ்சு செய்வதுபோல், இந்திவுலகிலும் யாராவது செய்ய முன்வரவேண்டும்” என்பது பன்னுவின் கோரிக்கை. மத்தவங்களை எதுக்கு எதிர்பார்க்கணும், நீயே பண்ணு புள்ள‌.