நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி வாக்குப்பதிவு சதவீதங்கள்..!

 

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி வாக்குப்பதிவு சதவீதங்கள்..!

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்குத் துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. நாங்குநேரியில் மழையின் காரணமாக சிறிது நேரம் தாமதமாகியும், விக்கிரவாண்டியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்ததால் சிறிது நேரம் தாமதமாகியும் வாக்குப் பதிவுகள்  நடைபெற்றது. 

Election

நாங்குநேரியில் 66 சதவீதமும், விக்கிரவாண்டியில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாங்குநேரி தொகுதியில் வாக்குப் பதிவு குறைவாகவே நடைபெற்றுள்ளது. பட்டியலின மக்களைத் தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க வேண்டும் என்று நாங்குநேரி தொகுதியில் மக்கள் தேர்தலைப் புறக்கணித்ததால் வாக்குப்பதிவு குறைவாக உள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும், தேர்தல் அமைதியாக நடைபெற்றதாகவும், வாக்குகளை   பத்திரமாக வாக்கு எண்ணும் இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டதாகவும் தேர்தல் அதிகாரி சத்ய பிரபா சாஹு தெரிவித்துள்ளார்.