நாங்களும் விளையாடுவோம்! மனிதர்களை விட அழகாக கூடைப்பந்து விளையாடும் கிளிகள்! வைரல் வீடியோ

 

நாங்களும் விளையாடுவோம்! மனிதர்களை விட அழகாக கூடைப்பந்து விளையாடும் கிளிகள்! வைரல் வீடியோ

இணையத்தில் விலங்குகள் பறவைகள் செய்யும் வித்தியாசமான செயல்கள் அவ்வப்போது வைரலாகி வரும்! சமீபத்தில் நிகழ்ந்த ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் பாதிக்கப்பட்ட கோலா கரடிகள் சாலையில் வந்து மனிதர்களிடம் தண்ணீர் வாங்கி பருகிய காட்சி உலகத்தையே உலுக்கியது.

இணையத்தில் விலங்குகள் பறவைகள் செய்யும் வித்தியாசமான செயல்கள் அவ்வப்போது வைரலாகி வரும்! சமீபத்தில் நிகழ்ந்த ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் பாதிக்கப்பட்ட கோலா கரடிகள் சாலையில் வந்து மனிதர்களிடம் தண்ணீர் வாங்கி பருகிய காட்சி உலகத்தையே உலுக்கியது. மிருகங்களுக்கு ஐந்து அறிவுதான் என்று மனிதர்கள் நினைத்துக்  கொண்டிருக்கிறார்கள். ஆனால், மனிதர்களை விட மிருகங்கள் எவ்வளவோ அறிவுத்திறன் கொண்டவை என்று அவ்வப்போது இணையத்தில் வெளியாகும் விடீயோக்கள் நிரூபிக்கின்றன. குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் காக்கை, மீன்களுக்கு உணவளிக்கும் வாத்து என வாயில்லா ஜீவன்களின் செயல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. 

crow-duck

தற்போது இணையத்தில், “கிளிகள் கூடைப்பந்து விளையாடுவது போல ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இதில், கிளிகளுக்கு ஏற்றாற்போல் ஒரு சிறிய கூடைப்பந்து மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. கிளிகள் ஒன்றுக்கொன்று பந்தை மாறி மாறி எடுத்துச் சென்று கூடைக்குள் போடுகின்றன. அவை போடும் ஒவ்வொரு ‘கோல்’க்கும் ஒரு நட் கொடுக்கப்படுகிறது. கிளிகளின் இந்த விளையாட்டு பார்ப்போர் இதயத்தை கவருகிறது.