“நாங்கல்லாம் அப்பவே அப்படி” : லாஸ்லியா ஆர்மியினர் செய்த செயலை பாருங்க பாஸ்!

 

“நாங்கல்லாம் அப்பவே அப்படி” : லாஸ்லியா ஆர்மியினர் செய்த செயலை பாருங்க பாஸ்!

நாட்கள் செல்ல செல்ல கவினுடன் காதல், ஓவர் ஆட்டிட்யூட் காரணமாக லாஸ்லியாவுக்கு இருந்த ஆதரவுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பாக மாறி வருகிறது.

பிக் பாஸ் லாஸ்லியா அடிக்கடி சொல்லும் கதைக்காதீங்க என்ற சொல் தற்போது டிஷர்ட்டுகளில் அச்சிடப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தர்ஷன், லாஸ்லியா, முகின் ஆகியோர் வெளியுலகத்திற்கு அதிகம் பரிட்சயமாகதவர்கள் தான். ஆனால்  தற்போது இவர்கள் அனைவர்க்கும் ஆர்மிகள் உருவாகினாலும் முதல் நாளே இணையத்தில் ட்ரெண்டானது  லாஸ்லியா. ஆரம்பத்தில் ஓவியாவை போல் இவர் செய்யும் சில குறும்புத் தனத்தால் இவருக்கு என்று பல ஆர்மி  உருவாகின. தினமும் இவர் நடனமாடுவதைப் பார்ப்பதற்கு என்றே சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்க ஆரம்பித்தனர். அந்த அளவிற்கு லாஸ்லியா பலரையும் கவர்ந்தார்.

losliya

ஆனால் நாட்கள் செல்ல செல்ல கவினுடன் காதல், ஓவர் ஆட்டிட்யூட் காரணமாக லாஸ்லியாவுக்கு இருந்த ஆதரவுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பாக மாறி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க லாஸ்லியா ஆர்மியை சேர்ந்த ரசிகர்கள் பலர், அவருக்கு ஆதரவாகவே இன்னும் இருந்து வருகின்றனர். 

losliya

இந்நிலையில் இலங்கை தமிழில் கதைக்காதீங்க என்று லாஸ்லியா  சொல்லும் வார்த்தை தற்போது டிஷர்ட்டுகளில் அச்சிடப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இதை அவரது ஆர்மியினர் பலரும் வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

losliya

முன்னதாக ஓவியா பேசிய நீங்க ஷட்அப் பண்ணுங்க என்ற வார்த்தை இதே டிஷர்ட்டுகளில் அச்சிடப்பட்டு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.