நாக்கை போல் செயல்படுங்கள்: காவல்துறைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை!

 

நாக்கை போல் செயல்படுங்கள்: காவல்துறைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  அறிவுரை!

சமயத்திற்கேற்ப சாதுரியமாக செயல்படும் நாக்கைப் போல், போலீசார் செயல்பட வேண்டும் என காவல்துறையினருக்கு  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை: சமயத்திற்கேற்ப சாதுரியமாக செயல்படும் நாக்கைப் போல், போலீசார் செயல்பட வேண்டும் என காவல்துறையினருக்கு  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை வழங்கியுள்ளார்.

காவல்துறையினரின் பெருமையை பேசும்  ‘வீரத்தியாகிகள்’ நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில், கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, புத்தகத்தை வெளியிட்டு 6119 சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘தமிழகம் பாதுகாப்பாக மிளிர ஜெயலலிதா வழியில் பணியினை மேற்கொண்டு வருவதாகவும், தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாகத் திகழ்வதாகவும் குறிப்பிட முதல்வர், சென்னை, கோவை போன்ற நகரங்களில் பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதற்குத் தமிழக காவல்துறை தான் காரணம் ‘எனப் பாராட்டினார். 

‘எதையும் கடித்து குதறும் வலிமை வாய்ந்த 32 பற்கள் நடுவில் சாதுரியமாக செயல்படும் நாக்கு, கண்டிப்பாகப் பேசுவதுடன், கனிவான சொற்களையும் பேசுகிறது. போலீசாரும் நாக்கைப் போல், தேவைப்படும் நேரத்தில்,  மிரட்டலாகவும், கனிவாகவும்,  சமயோசிதமாகச் செயல்பட வேண்டும்’ என அறிவுறுத்தினார்.