நாகர்கோவில்-மும்பை, திருநெல்வேலி-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கத்தில் அதிரடி மாற்றம்!

 

நாகர்கோவில்-மும்பை, திருநெல்வேலி-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கத்தில் அதிரடி  மாற்றம்!

நாகர்கோவில் – மும்பை – நாகர்கோவில் இடையே 16340/16339 என்ற எண்களுடனும், திருநெல்வேலி – மும்பை தாதர் – திருநெல்வேலி இடையே 11022/11021 என்ற எண்களுடன் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

ரயில் போக்குவரத்து பயணிகளின் நேரம், பணம் ஆகியவற்றை மிச்சப்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. அதனால் வெளியூர் வாசிகள் பண்டிகை, விசேஷ நாட்களில் ரயிலில் முன்பதிவு செய்ய படாதபாடு படுகிறார்கள்.  அதை பெரும்பாலும் ரயில்வே துறை சரியான முன்னறிவிப்போடு செய்தும் வருகிறது.

train

அந்த வகையில்  நாகர்கோவில் – மும்பை – நாகர்கோவில் இடையே 16340/16339 என்ற எண்களுடனும், திருநெல்வேலி – மும்பை தாதர் – திருநெல்வேலி இடையே 11022/11021 என்ற எண்களுடன் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் மதுரை – திண்டுக்கல் – கரூர் – ஈரோடு – சேலம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. ஆனால்  மற்ற ரயில் நிலையங்களைக் காட்டிலும் ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து மிக குறைந்த அளவிலான பயணிகள் பயணித்து வந்தனர். இதனால் இந்த ரயில்களை கரூர் – ஈரோடு – சேலம் தடத்திற்குப் பதிலாகக் கரூர் – நாமக்கல் – சேலம் வழியாக இயக்க தென் மாவட்டத்தைச் சேர்ந்த பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

train

இந்நிலையில்  தகவல் அறியும் சட்டம் மூலம் இந்த உண்மையைத் தெரிந்து கொண்ட ரயில்வே வாரியம்  ஈரோடு வழியாக செல்லும் இந்த ரயில்களை நாமக்கல் தடத்தில் இயக்க அனுமதியளித்துள்ளது.

அதன்படி, 16339 மும்பை – நாகர்கோவில் விரைவு ரயில், டிசம்பர் 1ம் தேதி முதலும், 16340 நாகர்கோவில் – மும்பை விரைவு ரயில் டிசம்பர் 2ம் தேதி முதலும்  நாமக்கல் வழியாக இயங்கும். மேலும் 11021 தாதர் – திருநெல்வேலி விரைவு ரயில், டிசம்பர் 7ம் தேதி முதலும், 11022 திருநெல்வேலி – மும்பை விரைவு ரயில் டிசம்பர் 9ம் தேதி புறப்படும் சேவையிலிருந்து நாமக்கல் வழியாக செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.