நஷ்டமடைந்துள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கும் போனஸை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! எந்தெந்த துறைக்கு எவ்வளவு போனஸ்? 

 

நஷ்டமடைந்துள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கும் போனஸை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! எந்தெந்த துறைக்கு எவ்வளவு போனஸ்? 

அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழக பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3.48 லட்சம் தொழிலாளர்கள் பயன் பெறுவர். 

அதன்படி,  “நிரந்தர தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,400 அதிகபட்சம் ரூ.16,800 தீபாவளி போனஸ். போனஸ் வழங்குவதன் மூலம் அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் 3,48,503 பேர் பயன் பெறுவர். மின்வாரியம், போக்குவரத்துக் கழகம், நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும். பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும். லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கு உபரி தொகையை கணக்கில்கொண்டு 20% போனஸ் தரப்படும். நஷ்டம் அடைந்துள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும்

Bonus

வீட்டு வசதி வாரியம், குடிநீர் வழங்கல், கழிவு நீரகற்று வாரிய ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும். பிற கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ் வழங்கப்படும். நிறுவனங்கள் ஒதுக்கும் உபரித்தொகைக்கு ஏற்ப 20% அல்லது 10% போனஸ் வழங்கப்படும்” என அறிவித்துள்ளது.