நவம்பர் 1, தமிழ்நாடு நாள் – முதலமைச்சர் அறிவிப்பு!

 

நவம்பர் 1, தமிழ்நாடு நாள் – முதலமைச்சர் அறிவிப்பு!

தமிழ்நாடு என பெயர் மாற்ற‌வேண்டும் என 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனாரையும், ஆட்சி பொறுப்பேற்றதும் உடனடியாக தமிழ்நாடு என பெயர் சூட்டிய பேரறிஞரையும் அந்நாளில் போற்றி மகிழ்வோம்!

கேரளா, கர்நாடகா, ஆந்திராவின் சில பகுதிகள் என ஒருங்கிணைந்து பரந்துவிரிந்திருந்த‌ மாநிலத்தை ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்றே அழைத்து வந்தனர். மொழிவாரியாக‌ மாநிலங்கள் பிரிக்கப்பட்டது நவம்பர் 1 அன்று. தனி மாநில அந்தஸ்து கிடைத்ததை தொடர்ந்து, கேரளம் மற்றும் கர்நாடக அரசுகள், நவம்பர் ஒன்றாம் தேதியை தத்தமது மாநில நாளாக கொண்டாடி வருகின்றன. ‘நம்மகிட்டேர்ந்து பிரிஞ்சுபோனதாலதான் அவங்க தனியா நாள் கொண்டாடுறாங்க, நாம யார்கிட்டே இருந்தும் பிரிஞ்சு வரலையே’ என்ற நினைப்பிலேயே இத்தனை ஆண்டுகளை தமிழகம் கழித்துவிட்டது. இனிமேலும் இல்லை.

TamilNadu

நவம்பர் ஒன்றாம் தேதி இனிமேல் ஒவ்வொரு வருடமும், தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் சட்டமன்றத்தில் இன்று 110வது விதியின்கீழ் அறிவித்துள்ளார். மிக நீண்ட நெடிய காலங்களுக்குப் பிறகு 110ஆவது விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட உருப்படியான அறிவிப்பு இதுதான். தமிழ்நாடு என பெயர் மாற்ற‌வேண்டும் என 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனாரையும், ஆட்சி பொறுப்பேற்றதும் உடனடியாக தமிழ்நாடு என பெயர் சூட்டிய பேரறிஞரையும் அந்நாளில் போற்றி மகிழ்வோம்!