நல்ல ‘காரியம்’ ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி… சாக்லெட் சாப்பிட்டால் என்னாகும்னு தெரியுமா…!

 

நல்ல ‘காரியம்’ ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி… சாக்லெட் சாப்பிட்டால் என்னாகும்னு தெரியுமா…!

உடலுறவுக்கு முன் உங்கள் பாட்னருக்கு டார்க் சாக்லெட்டை கிஃப்டாக கொடுங்கள்.காம இச்சைக்கு மட்டுமல்லாது,உடலின் ஆரோக்கியத்திற்கும் டார்க் சாக்லெட் பெரிதும் உதவுகிறது.

‘ஹாய் சுரேஷ்…ஹாய் ரமேஷ்…’ என்று எப்பவோ பார்த்த பழைய நண்பனைப் பார்க்கும் இரண்டு பேர் ஒருத்தரை ஒருத்தர் அறிமுகப் படுத்திக்கொள்வதும்… சாக்லேட் சாப்பிட்டு விட்டு இந்த உலகத்தையே மறந்து விடுவதாகவும் ஒரு விளம்பரம் பல காலமா வந்துக்கிட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்.

அப்படி தன்னைச்சுத்தி நடப்பதை அடியோடு மறக்க வைத்துவிடும் என்று அந்த விளம்பரத்தில் சொல்வது எதெற்கென்றால்…அந்த சாக்லேட்டின் சுவை,அவ்வளவு சிறப்பா இருக்கும் என்பதை சொல்வதற்குத்தான்.

டார்க் சாக்லெட்

இது ஒரு பக்கம் இருந்தாலும் அன்பையும் காதலையும் வெளிப்படுத்துபவர்களின் முதல் சாய்ஸில் உலகம் முழுக்க சாக்லெட்டுக்கு எப்பவுமே முதலிடம்தான்.காதலைச் சொல்வதற்கு மட்டுமல்ல…காமத்தை தூண்டுவதற்கும் சாக்லேட் பயன்படுகிறது என்பதுதான் சமீபகால ஆய்வின் முடிவுகள் சொல்கின்றன.

மூளையில் இன்பத்தை தூண்டும் பீனைல் எத்திலமைன் மற்றும் செரொட்டோனின் ஆகிய வேதிப்பொருள்கள் சாக்லெட்டில் உள்ளன.இது மனிதர் உடலின் உணர்ச்சி பெருக்கினையும், ஆற்றல் நிலையையும் அதிகரிக்கச் செய்வதால்,சாக்லெட் சாப்பிடும்போது காம உணர்வு அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.

 பெரும்பாலும் டார்க் சாக்லெட் வகைகளை சாப்பிடும்போது உடலுக்கும்,மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். ஸோ,உடலுறவுக்கு முன் உங்கள் பாட்னருக்கு டார்க் சாக்லெட்டை கிஃப்டாக கொடுங்கள்.காம இச்சைக்கு மட்டுமல்லாது,உடலின் ஆரோக்கியத்திற்கும் டார்க் சாக்லெட் பெரிதும் உதவுகிறது.

ரொமான்ஸ்

 வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த டார்க் சாக்லெட்டை உண்பதால்,இதயம், மூளை, ரத்த சோகை, ரத்த சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை கட்டுக்குள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

அப்பறம் என்ன…’நல்ல காரியம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி,சாக்லெட் சாப்பிடணும்னு எங்கம்மா சொல்லிருக்காங்க’ என்ற விளம்பரத்தையும் பார்த்திருப்பீங்கள்ல…