நல்லி எலும்பு சாறு… கொல்லிமலை பாரம்பர்ய ரெசிப்பி 

 

நல்லி எலும்பு சாறு… கொல்லிமலை பாரம்பர்ய ரெசிப்பி 

ஒவ்வொரு ஊரிலும்,கிராமத்திலும் அந்தந்த ஊருக்கான பாரம்பர்ய உணவு வகைகள் இருக்கும்.இது,சேலத்தை அடுத்துள்ள கொல்லிமலை,கிராமத்து மக்களின் பாரம்பரிய ரெசிப்பி.மிகவும் எளிமையான ரெசிப்பி,அவர்கள் மண்பானையில் , விறகு அடுப்பில் செய்கிறார்கள்.நமக்கு வாய்த்தது,கேஸ் அடுப்பும்,குக்கரும்தான்

ஒவ்வொரு ஊரிலும்,கிராமத்திலும் அந்தந்த ஊருக்கான பாரம்பர்ய உணவு வகைகள் இருக்கும்.இது,சேலத்தை அடுத்துள்ள கொல்லிமலை,கிராமத்து மக்களின் பாரம்பரிய ரெசிப்பி.மிகவும் எளிமையான ரெசிப்பி,அவர்கள் மண்பானையில் , விறகு அடுப்பில் செய்கிறார்கள்.நமக்கு வாய்த்தது,கேஸ் அடுப்பும்,குக்கரும்தான்.

cooking

தேவையான பொருட்கள்:

நல்லி எலும்பு ½ கிலோ
( நெஞ்செலும்பு,கழுத்து எலும்பு,கால் எலும்பு எல்லாம் கலந்து போட்டால் சுவை கூடும்)

bone

சின்ன வெங்காயம் ¼ கிலோ

இஞ்சி,பூண்டு இடித்தது 50 கிராம்
பச்சை மிளகாய் இரண்டாக ஒடித்தது 5
இடித்த மிளகு,சீராகத் பொடி 50 கிராம்

image

தக்காளி 4
மஞ்சள்தூள் ½ ஸ்பூன்
மிளகாய்தூள் 2 ஸ்பூன்
மல்லித்தூள் 3 ஸ்பூன்
நல்லெண்ணெய் 50 மில்லி

image

கறிவேப்பிலை
மல்லி இலை

எப்படிச் செய்வது

குக்கர் சூடானதும் அதில் நல்லெண்ணெய் விட்டு சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் , வெங்காயம் வதங்கியதும் ,ஒடித்த பச்சை மிளகாய், இடித்த இஞ்சிப்பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கி,அத்துடன் தக்காளி உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்குங்கள்.

cook

இப்போது மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மூன்றையும் போட்டு கிளறிவிட்டு,அதில் எலும்புகளைப் போடுங்கள்.அத்துடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பை சரிபாருங்கள்.

food

தேவைப்பட்டால் மேலும் சிறிது உப்புச் சேர்த்து குக்கரை மூடி வெயிட் போட்டு ஆறு விசில் விட்டு இறக்குங்கள்.அப்படியே குடிக்கலாம்,சோற்றில் தளற விட்டு குழப்பியும் அடிக்கலாம்.