நல்லாட்சி குறியீட்டில் தமிழகம் முதலிடம்…முதல்வர் வாழ்த்து !

 

நல்லாட்சி குறியீட்டில் தமிழகம் முதலிடம்…முதல்வர் வாழ்த்து !

‘பெரிய மாநிலங்கள்’ என்ற பிரிவில் நல்லாட்சி குறியீட்டில் தமிழ்நாடு 5.62 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தது. 

இந்தியாவில் உள்ள 27 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் பொது உள்கட்டமைப்பு,பொதுச் சுகாதாரம், வேளாண்மை மற்றும் துணைத் தொழில்கள், வர்த்தகம் மற்றும் தொழில், மனிதவள மேம்பாடு உள்ளிட்ட 10 காரணிகளைக் கொண்டு செயல்திறன் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இது, வடகிழக்கு மற்றும் மலைப்பிரதேச மாநிலங்கள், பெரிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என்ற 3 பிரிவாகப் பிரித்து மதிப்பிடப்படுகிறது. ‘பெரிய மாநிலங்கள்’ என்ற பிரிவில் நல்லாட்சி குறியீட்டில் தமிழ்நாடு 5.62 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தது. 

ttn

இது தொடர்பாக முதலமைச்சர் எழுதிய கடிதத்தில், ” மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவை நனவாகும் படி , சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு தமிழகம் தொடர்ந்து செயல்பட  அனைத்துத் துறைச் செயலாளர்களின் பணியும் முக்கியமானது. எனவே,  அனைத்து அரசு ஊழியர்களுக்கும்  எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.