நரேந்திர மோடி ஆட்சிக்கு வரவில்லை என்றால்… நடிகர் சித்தார்த் அதிரடி பதிவு!

 

நரேந்திர மோடி ஆட்சிக்கு வரவில்லை என்றால்… நடிகர் சித்தார்த் அதிரடி பதிவு!

மோடிக்கு 2-வது வாய்ப்பு கிடைக்கவில்லையெனில், தனது ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக அழித்து விடுவதாக நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ளார். 

சென்னை: மோடிக்கு 2-வது வாய்ப்பு கிடைக்கவில்லையெனில், தனது ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக அழித்து விடுவதாக நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ளார். 

மத்திய ஆட்சியை தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 7 கட்டமாக நிறைவு பெற்றுள்ள  நிலையில் இன்று வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து நாடே காத்திருக்கிறது.  மொத்தம் உள்ள 543 தொகுதிகளில்  வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. ஆந்திரா, ஒடிசா, அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அதே போல் தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக இருந்த  22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்த முடிந்தது.

இந்த நிலையல் இன்று நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. காலை 9:15 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 271 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 104 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. 

இதனையடுத்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில் தேர்தல் குறித்து பதிவுகள் செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக நடிகர் சித்தார்த் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ‘மோடி மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்றால் சத்தியமாக எனது ட்விட்டர் ஆக்கவுண்டை நிரந்தரமாக நீக்கம் செய்து விட்டு செல்கிறேன்.ஜெய் ஹிந்த்’ என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நடிகர் சித்தார்த் மோடியின் பேச்சைக் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருவதால், சித்தார்த் இவ்வாறு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.