நயன்தாரா போல ‘பாசிட்டிவிட்டி’ டாட்டூவை கையில் குத்தியுள்ள பிரபல நடிகை!

 

நயன்தாரா போல ‘பாசிட்டிவிட்டி’ டாட்டூவை கையில் குத்தியுள்ள பிரபல நடிகை!

இதையடுத்து நடிகர் சிபி ராஜுடன் மாயோன் படத்தில் இவர் நடித்துள்ளார். அப்படம் இன்னும் வெளிவரவில்லை.

தமிழில் ‘பலே வெல்லயத்தேவா’, ‘பிருந்தாவனம் ‘ போன்ற படங்களில் நடித்தவர் தன்யா  ரவிச்சந்திரன். இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த கருப்பன் திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.  இதையடுத்து நடிகர் சிபி ராஜுடன் மாயோன் படத்தில் இவர் நடித்துள்ளார். அப்படம் இன்னும் வெளிவரவில்லை.

ttn

இந்நிலையில் தன்யா  ரவிச்சந்திரன் சமீபத்தில் போட்டோஷூட்  செய்து பல கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள் அவர் கையில் டாட்டூ குத்தியிருக்கும் புகைப்படத்தையும் வைரலாக்கி  உள்ளனர். 

காரணம்  நடிகை நயன்தாரா முன்னாள் காதலர் பிரபுதேவாவின் பெயரை கையில் பச்சை குத்தியிருந்தார்.ஆனால்  அவர்கள் காதல் தோல்வியில் முடியவே அதை ‘பாசிட்டிவிட்டி’ என்று மாற்றிக் கொண்டார். அதேபோல் தன்யாவும் கையில் ‘பாசிட்டிவிட்டி’ என்ற டாட்டூவை குத்தியுள்ளார். அதை அவர்  கடந்த சில மாதங்களுக்கு முன்பு போட்டியிருந்தாலும், தற்போது அதை ரசிகர்கள் வைரலாக்கி  வருகின்றனர்.