நயன்தாரா சர்ச்சைக்குரிய பேச்சு: பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராதா ரவி 

 

நயன்தாரா சர்ச்சைக்குரிய பேச்சு: பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராதா ரவி 

நயன்தாரா குறித்துப் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது எனவும் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் நடிகர் ராதா ரவி கூறியுள்ளார்.

சென்னை: நயன்தாரா குறித்துப் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது எனவும் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் நடிகர் ராதா ரவி கூறியுள்ளார்.

நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கொலையுதிர் காலம். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியதாவது,’ நயன்தாரவை பற்றி வராதே செய்தியே இல்லை,அவரை நடிகையர் திலகம், புரட்சி தலைவி என்று அழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார்.அதே சமயம் சீதையாகவும் நடிக்கிறார். பார்த்தவுடனே கும்பிடறவங்களும் நடிக்கிறார்கள்,  பார்த்த உடனே கூப்பிடுறவங்களும் நடிக்கிறார்கள்’ என்று  ஆபாசமாகப் பேசினார்.

kolaiyuthir kalam

நடிகர் ராதா ரவியின் அடிப்படை நாகரீகமற்ற பேச்சுக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அவர் மீது நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விக்னேஷ் சிவன், சின்மயி,ராதிகா உள்பட பலரும் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் நயன்தாரா குறித்து பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில் ‘நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது . அதற்காக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மனம் புண்பட்டிருந்தால் நான் அவர்களிடம் நேரடியாக சென்று மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னால் திமுகவுக்கு பாதிப்பு என்றால் கட்சியிலிருந்து விலகிக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
 

இதையும் படிங்க: ராதா ரவி இனி படங்களில் நடிக்க வாய்ப்பில்லை: அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பிரபல நிறுவனம்!