நயன்தாராவுக்கு வில்லனாக மாறிய பிரபல சின்னதிரை நடிகர்!

 

நயன்தாராவுக்கு வில்லனாக மாறிய பிரபல சின்னதிரை நடிகர்!

நடிகை நயன்தாராவின் மலையாள படத்தில் பிரபல சின்னதிரை நடிகர் வில்லனாக நடித்துள்ளார். 

சென்னை: நடிகை நயன்தாராவின் மலையாள படத்தில் பிரபல சின்னதிரை நடிகர் வில்லனாக நடித்துள்ளார். 

தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவருக்கு நாடு முழுக்க ஏரளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். 

இந்நிலையில், இவர் மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக  லவ் ஆக்சன் டிராமா என்ற படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் தியான் ஸ்ரீனிவாசன் இந்த படத்தை இயக்குகிறார். 

prajan

இதில் வில்லனாக சின்னத்திரை பிரபலம் பிரஜன் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பிரஜன் ஏற்கனவே ‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல் சின்னதிரையிலும் பல தொடர்களில் நடித்துள்ளார்.