“நம்மள யாராவது கடத்தினா போலீசுக்கு போலாம் ..போலீசே கடத்தினா “..-.பணத்துக்காக அப்படித்தான் பண்ணாங்க… 

“நம்மள யாராவது கடத்தினா போலீசுக்கு போலாம் ..போலீசே கடத்தினா “..-.பணத்துக்காக அப்படித்தான் பண்ணாங்க… 

மீரட்டில் புலந்த்ஷாரில்  குற்றவாளிகளை  கடத்தி, பின்னர் மிரட்டி  உறவினரிடமிருந்து பணம் பறித்ததாக, மூன்று தலைமை கான்ஸ்டபிள்கள் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மீரட்டில் புலந்த்ஷாரில்  குற்றவாளிகளை  கடத்தி, பின்னர் மிரட்டி  உறவினரிடமிருந்து பணம் பறித்ததாக, மூன்று தலைமை கான்ஸ்டபிள்கள் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

 சஞ்சீவ் மாலிக், ஜாகிர் உசேன், யோகிராஜ் சிங் (அனைத்து தலைமை கான்ஸ்டபிள்கள்) மற்றும் தீரஜ் குமார் (கான்ஸ்டபிள்) ஆகியோர் புலந்த்ஷாஹரில் உள்ள சிக்கந்தராபாத் காவல் நிலையத்தில் பணிபுரிந்தனர். அதனால் குற்றவாளிகளின் முழுவிவரமும் அவர்களுக்கு தெரியும்.

அதனால் இந்த நான்கு பேரும்  பழங்குடி  சமூகங்களைச் சேர்ந்த குற்றவாளிகளை  கடத்தி , அவர்கள் உறவினர்களுக்கு போன் செய்து இவர்களை என்கவுன்டரில் சுட்டுவிடுவதாக  மிரட்டல் விடுத்து பணம் கேட்பார்கள். இவர்களின் மிரட்டலுக்கு பயந்த பல பேர் இவர்களிடம் பணம் கொடுத்துள்ளார்கள், இவர்களின் மோசடி பற்றி உயரதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து ,இவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் குற்றம் நிரூபணமாகியதால் அவர்கள்  அனைவரும் விசாரணை முடியும் வரை பணியில்  இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.