நம்பிதானே டா பழகினேன்… ஏன் ஏமாற்றினாய்? கதறும் பெண்! திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிய இளைஞர்…!

 

நம்பிதானே டா பழகினேன்… ஏன் ஏமாற்றினாய்? கதறும் பெண்! திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிய இளைஞர்…!

திருமணம் செய்து கொள்வதாக ஆசையைத் தூண்டி பெண்ணிடம் 7 லட்சம் ரூபாய் பறித்த கேரள இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருமணம் செய்து கொள்வதாக ஆசையைத் தூண்டி பெண்ணிடம் 7 லட்சம் ரூபாய் பறித்த கேரள இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஏமாற்றம் தந்த விரக்தியில் நம்மிடையே பேசிக் கொண்டிருப்பவர், ரேவதி. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கணவரிடம் விவாகரத்து பெற்று தனியே வசித்து வருகிறார். பெற்றோருடனான பிரச்னை, திருமண வாழ்க்கையில் சந்தித்த துயரங்கள் என ரேவதியின் வாழ்வை இருள் சூழ்ந்திருந்தது. அந்த நேரத்தில், அழையா விருந்தாளி ஒருவர் ரேவதியின் வாழ்க்கைக்குள் நுழைந்தார். கல்லூரிக் கால நண்பரான கேரளாவைச் சேர்ந்த ஜிதின்ஷா, 15 ஆண்டுகளுக்குப் பின் அவருடன் தொடர்பில் வந்தார். இன்ஸ்டாகிராம் மூலமாக நட்பை மீண்டும் புதுப்பித்துக் கொண்ட அவர், ரேவதியுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாக ரேவதியின் பிரச்னைகள் அவருக்கு தெரியவந்தது. திடீரென ஒரு நாள், தன்னை திருமணம் செய்து கொள்கிறாயா என ரேவதியிடம் கேட்டுள்ளார், ஜிதின்ஷா. முதலில் மறுத்த ரேவதி, ஜிதின்ஷா மீதான நம்பிக்கையால் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார். 

திருமண முடிவு இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை மேலும் அதிகப்படுத்தியது. இந்நிலையில், தனக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்திருப்பதாகவும், அதற்கான முன்னேற்பாடுகளுக்கு 10 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுவதாக புதிய குண்டு ஒன்றை தூக்கிப்போட்டார் ஜிதின்ஷா. தன்னுடன் சேர்ந்து வாழப் போவதாக கூறியவர், தற்போது அமெரி்க்கா செல்கிறேன் என்றதும் சற்று அதிர்ந்தார் ரேவதி. ஆனால், வெளிநாட்டில் வேலை கிடைத்துவிட்டால், நாம் இருவரும் சேர்ந்து மிகவும் சந்தோஷமாக வாழலாம் என ஆசையைத் தூண்டியிருக்கிறார், ஜிதின்ஷா. ஆனால், இவை அனைத்தும் கானல் நீர் என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை. ரேவதி தன் மேல் வைத்த நம்பிக்கையை பயன்படுத்திக் கொண்ட ஜிதின்ஷா, அவரிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்ததாக கூறப்படுகிறது. ஜிதின் தன்னை அமெரிக்கா கூட்டிச் செல்வார் என நம்பி, ரேவதி கண்ட கனவுகள் எல்லாம், அதே நாட்டிலிருந்து வந்த தகவலால் கலைந்து போனது தான் வேதனை. ரேவதியை முகநூலில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், தான் ஜிதின்ஷாவின் மனைவி என்றும், திருமணம் ஆகவில்லை எனக்கூறி அவர் பல பெண்களை ஏமாற்றி வருவதாகவும் கூறி அதிர்ச்சியளித்துள்ளார். இதுகுறித்த கேட்டபோது முதலில் பதிலளிக்க மறுத்த ஜிதின், பின்னர் ரேவதியுடன் பழகுவதை முற்றிலும் நிறுத்திக் கொண்டார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், துபை தப்பிச் செல்ல இருந்த ஜிதின்ஷாவை கடந்த புதன்கிழமை கைது செய்தனர்.