நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி – கோவாவில் ஆட்சி அமைத்தது பாஜக

 

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி – கோவாவில் ஆட்சி அமைத்தது பாஜக

கோவாவில் புதிய முதல்வரான பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு, சட்டப்பேரவையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

கோவாவில் புதிய முதல்வரான பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு, சட்டப்பேரவையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

நம்பிக்கை வாக்கெடுப்பு 

கோவா மாநில முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவராக இருந்த பிரமோத் சாவந்த், தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் புதிய முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், புதிய அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் வகையில், சிறப்புக் கூட்டத்தொடரை ஆளுநர் மிருதுளா சின்ஹா புதன்கிழமை கூட்டினார். 

manogar parikkar

அப்போது பாஜக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் அரசை ஆதரித்து 20 உறுப்பினர்கள் வாக்களித்தனர். பாஜக எம்எல்ஏக்கள் 11 பேரும், அதன் கூட்டணிக் கட்சிகளான கோவா முன்னணி கட்சி மற்றும் எம்ஜிபி ஆகியவற்றின் தலா 3 உறுப்பினர்கள், 3 சுயேட்சைகள் ஆகியோர் அரசை ஆதரித்து வாக்களித்தவர்கள் ஆவர்.

காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 14 பேரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் அரசை எதிர்த்து வாக்களித்தனர். 

பாஜக வெற்றி 

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதல்வர் பிரமோத் சாவந்த் சட்டமன்றத்தில் பேசுகையில், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் வளர்ச்சி நடவடிக்கைகள் சென்று சேருவதற்கு அனைத்து உறுப்பினர்களும் அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பிரமோத் சாவந்த்

மேலும், தன்னை அரசியலில் மேம்படுத்தியதில் பாரிக்கரின் பங்களிப்பு குறித்து உணர்ச்சிபூர்வமாகக் குறிப்பிட்டார். இன்றைக்கு நான் ஒரு எம்எல்ஏ-வாக இருக்கிறேன் என்றால், இந்த முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கின்றேன் என்றால், அதற்காக பாரிக்கருக்கு தலைவணங்க வேண்டும் என்று பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.