நம்பர் ப்ளேட்டோடு சவுகிதார் சேர்த்ததால் அபராதம் கட்டிய பாஜக எம்.எல்.ஏ

 

நம்பர் ப்ளேட்டோடு சவுகிதார் சேர்த்ததால் அபராதம் கட்டிய பாஜக எம்.எல்.ஏ

சவுகிதார் என்றும் பாராமல் காவல்துறையினர் இப்படி அபராதம் விதித்ததை நினைத்து ராம் டங்கூர் மனம் வருந்தியிருக்கிறார்.

பாஜக தலைவர்கள் எல்லாம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கள் டிவிட்டர் பக்கத்தில் சவுகிதார் (காவலன்) என்ற வார்த்தையை பெயரோடு அடைமொழியாக சேர்த்துக் கொண்டனர். மற்றவர்கள் டிவிட்டரில் செய்ததை நாம் ஏன் பிறவற்றில் செயல்படுத்தக் கூடாது என மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ ராம் டங்கூர்க்கு ஒரு யோசனை தோன்றியிருக்கிறது.

ராம்

பந்தானா எம்.எல்.ஏவான ராம் டங்கூர், சவுகிதார் பந்தானா என்ற வார்த்தையை தனது கார் நம்பர் ப்ளேட்டோடு சேர்த்துள்ளார்.

டங்கூர்

காரில் பயணித்துக் கொண்டிருந்த ராம் டங்கூரை காவல்துறையினர் வழிமறித்துள்ளனர். நம்பர் ப்ளேட்டில் சவுகிதார் சேர்த்ததற்கு அபராதம் வசூல் செய்திருக்கிறார்கள். சவுகிதார் என்றும் பாராமல் காவல்துறையினர் இப்படி அபராதம் விதித்ததை நினைத்து ராம் டங்கூர் மனம் வருந்தியிருக்கிறார்.

ராம்

இதுகுறித்து டங்கூர், இங்கே ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ், பாஜகவினரை வஞ்சிக்கிறது என தெரிவித்துள்ளார். இன்னும் எத்தனை சவுகிதார்கள் அபராதம் கட்டப் போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.

 

இதையும் வாசிங்க

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் கமல் பட நாயகி: வெற்றி வாய்ப்பு கிட்டுமா? 

தி.மு.க கூட்டணி தோல்வியை அடையும்: மு.க.அழகிரி உறுதி ; கடுப்பான தி.மு.க.வினர்!

ஊழல் செய்தால் விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன்: சீமான் விமர்சனம்