நம்பர் பிளேட் இல்லாமல் வந்த காவல் வாகனம் ! இளைஞரை கடத்துவதாக நினைத்து சுற்றி வளைத்த மக்கள் !

 

நம்பர் பிளேட் இல்லாமல் வந்த காவல் வாகனம் ! இளைஞரை கடத்துவதாக நினைத்து சுற்றி வளைத்த மக்கள் !

மதுரையில் பதிவெண் இல்லாமல் காவல் வாகனத்தில் வந்தவர்கள் இளைஞரை அழைத்து சென்றதால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் சுற்றி வளைத்து சிறைப்பிடித்தனர்

மதுரையில் பதிவெண் இல்லாமல் காவல் வாகனத்தில் வந்தவர்கள் இளைஞரை அழைத்து சென்றதால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் சுற்றி வளைத்து சிறைப்பிடித்தனர்.

sample

நேற்று நள்ளிரவு மதுரை குலமங்கலம் பகுதிக்கு காவல் வாகனம் ஒன்று வந்துள்ளது. அதில் இருந்து இறங்கிய 4 பேர், தாங்கள் தனிப்படை போலீசார் என்றும் சூர்யா என்பவரை விசாரிப்பதற்கு அழைத்து செல்கிறோம் என்றும் கூறி சூர்யாவை அந்த வாகனத்தில் அழைத்து சென்றனர். முதலில் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காத உறவினர்கள், பொதுமக்கள் இளைஞர் சூர்யாவை அழைத்து சென்ற காவல் வாகனத்தில் பதிவெண் இல்லாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 
ஒருவேளை சினிமாவில் வருவதுபோல் மர்மநபர்கள் யாராவது சூர்யாவை கடத்தி செல்கிறார்களான என்று பயந்து விட்டனர். பின்னர் பொதுமக்கள் சிலர் தங்களது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று அந்த காவல் வாகனத்தை சூர்யா நகர் சுங்கச்சாவடி அருகே மடக்கிப் பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து புதூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

station

இதையடுத்து அங்கு வந்த புதூர் காவல் ஆய்வாளர் வாகனத்தில் இருந்தவர்கள் கரூர் மாவட்டத்தில் இருந்து வந்த தனிப்படை காவலர்கள் என்பதை உறுதி செய்தனர். வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த குலமங்குலம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞரை கைது செய்ய வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.  மேலும் அவர்களது அடையாள அட்டையை பரிசோதனை செய்ததில் உண்மையான காவலர்கள் என்பதும் தெரியவந்தது.
பின்னர் அங்கேயே அந்த வாகனத்திற்கு புதிய நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு அங்கிருந்து அனுப்பிவைக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது வண்டிகளில் வாகன எண் இல்லையென்றால் வழக்கு போடுகிறார்கள். ஆனால் காவல் வாகனத்திலேயே பதிவெண் இல்லை என்பது வேடிக்கையாக உள்ளது.