‘நமக்கு எது நல்லதுக்குறது நம்ம மண்ணுக்கு தான் தெரியும்’ : அதிரிபுதிரியான பட்டாஸ் டிரைலர்!

 

‘நமக்கு எது நல்லதுக்குறது நம்ம மண்ணுக்கு தான் தெரியும்’ : அதிரிபுதிரியான  பட்டாஸ் டிரைலர்!

இப்படத்தில் வெளியான பாடல்கள் அத்தனையும் மக்கள் மத்தியில் வரவேற்பை  பெற்றுள்ளது. 

‘பட்டாஸ்’ படத்தின்  டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

‘கொடி’ படத்தின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் மீண்டும் தனுஷ் நடித்துள்ள  படம் பட்டாஸ். இப்படத்தில் நடிகை சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்பட பலர் நடித்துள்ளனர்.சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு விவேக் – மெர்வின் என்ற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். இப்படத்தில் வெளியான பாடல்கள் அத்தனையும் மக்கள் மத்தியில் வரவேற்பை  பெற்றுள்ளது. 

ttn

இந்நிலையில் பட்டாஸ் படத்தின் டிரைலர்  இன்று வெளியாகியுள்ளது. அதில், ‘நமக்கு எது நல்லதுக்குறது நம்ம மண்ணுக்கு   தான் தெரியும். அந்த மண்ணை காப்பாத்தி அடுத்த தலைமுறை கிட்ட கொடுக்குறது நம்ம கடமை இல்லையா  என்ற வசனத்துடன் ஆரம்பிக்கிறது டிரைலர்.  பிளாஷ்பேக்கில் வரும் தனுஷின் மிரட்டலான காட்சிகளில் சினேகாவின் அழகும்  தெரிகிறது.

ttn

இதை தொடர்ந்து இளமை ததும்ப ததும்ப   துறுதுறுவென உள்ள தனுஷின் ஆட்டங்களும் டிரைலரில் அதிரிபுதிரியாக உள்ளது.

ttn

உன்னலாம் தண்ணியில்லாம குளிப்பாட்டி டவலில்லாம துவட்டி விடுவேன் என்ற வசனம் திருடா திருடி, திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் தனுஷை பார்த்தது போல உள்ளது.  ஆக்ஷன், காதல், காமெடி என  கலர்புல்லாக இருக்கும் பட்டாஸ் டிரைலரில்  இறுதியாக பேருக்கு பின்னாடி அப்பன் பேர போட்டுக்குறது மட்டும் பெருமை இல்லடா; அந்த பேர காப்பாத்துற மாதிரி நடந்துக்கணும்’ என்று கூறி மாஸ்  காட்டுகிறார். 

பட்டாஸ்  திரைப்படம் வரும் 16 ஆம் தேதி வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு வெளியாகும் தனுஷின் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.