நட்சத்திர பேச்சாளர் பட்டியலிலிருந்து அமைச்சர் பெயரை நீக்க உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்!

நட்சத்திர பேச்சாளர் பட்டியலிலிருந்து அமைச்சர் பெயரை நீக்க உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்!

துரோகிகளை சுட்டுக்கொல்வோம் என்று டெல்லி தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய மத்திய நிதித்துறை இணை அமைச்சர் மற்றும் எம்.பி பெயரை நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலிலிருந்து நீக்கும்படி பா.ஜ.க-வுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

parvesh-sahib-singh-01

டெல்லி சட்டமன்ற தேர்தல் பிப்ரவரியில் நடைபெற உள்ளது. இதையொட்டி  தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ரிதலா தொகுதி பிரசாரத்தின் போது மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் துரோகிகளை சுட்டுக்கொல்வோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் கோஷத்தை எழுப்பினார். அதேபோல் பர்வேஷ் ஷாகிப் சிங் என்ற பா.ஜ.க எம்.பி டெல்லி தேர்தலில் வெற்றி பெற்றதும் அரசு நிலத்தில் உள்ள மசூதிகள் எல்லாம் இடிக்கப்படும் என்றார்.

parvesh sahib singh

இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் புகார் கூறின. இது குறித்து விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இவர்கள் மீது மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்த்த வேளையில், “இவர்கள் இருவரது பெயரையும் பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், இவ்வளவு சாதாரணமான உத்தரவைப் பிறப்பிப்பதா? தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.